புதன், 24/01/18, 8:26 AM
Welcome, Guest
Home » 2011 » ஆடி » 16 » 5 நாளில் எல்லாம் முடிஞ்சிடும்! - த்ரிஷா
2:44 PM
5 நாளில் எல்லாம் முடிஞ்சிடும்! - த்ரிஷா
இன்னும் 5 நாளில் எல்லாம் முடிஞ்சிடும் என்று மங்காத்தா சூட்டிங் பற்றி நடிகை த்ரிஷா கூறியுள்ளார். மங்காத்தா படத்தில் அஜித் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா, இந்த படத்‌தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். தற்போது காவலன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா அளித்துள்ள பேட்டியில்,  பாடிகார்ட் (காவலன்) படத்தின் கதை அற்புதமானது. உணர்வு பூர்வமான காதலை உள்ளடக்கியது.
இதில் எனது கேரக்டர் ரொம்ப பிடித்துள்ளது. ரொம்ப ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளோம். கல்லூரி சீன்கள் முடிந்து விட்டது. நயன்தாரா, அசின் ஆகியோர் மலையாளம், தமிழில் ஏற்கனவே இப்படத்தில் நடித்துள்ளனர். இருவரில் யார் நடிப்பு உயர்வானது என்று சொல்ல முடியாது. இரண்டு பேருமே சிறந்த நடிகைகள், ஆனால் நான் அவர்கள் நடிப்பை பின் பற்றமாட்டேன். தெலுங்கு பாடிகார்ட் படத்தில் எனது தனித்துவத்தை காட்டுவேன். எனது தந்தை கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பை விசாகபட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் நடத்த உள்ளோம், என்று கூறியுள்ளார்.

மங்காத்தா பற்றிய கேள்விக்கு பதில் அளித்த த்ரிஷா, இப்போது என் கையில் போதுமான அளவு ‌படங்கள் கைவசம் உள்ளன. புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. மங்காத்தா படத்தில் இன்னும் ஐந்து நாட்கள் நடிக்க வேண்டி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடிந்து விடும், என்றார்.
Views: 1187 | Added by: tamil | Rating: 4.5/2
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]