வெள்ளி, 03/05/24, 11:26 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » மென்பொருட்கள் [ Add new entry ]

குழந்தைகளுக்கான ஒரு க்ரியேடிவ் மென்பொருள்
அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு
என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே  47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு
மனதில் வன்முறை எண்ணங்கள்  வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி
கொடுத்துவிட்டோம்.
கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான்   சுற்றுகிறார்கள்
நமது சின்னஞ் சிறுசுகள்.
அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist
ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும்,
க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச
மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக  குழந்தைகள்தினத்தில் வழங்கி மகிழ்
செய்யுங்கள்.
தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.
இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.
முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும்
எளிது.  Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து
தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை  அளவு, ஒலி
ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.
இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான
Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.
Category: மென்பொருட்கள் | Added by: tamilan (04/03/10) | Author: MAVAIGAJAN
Views: 1497 | Comments: 1 | Tags: Paint Brush + Power Point + Instant | Rating: 0.0/0
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]