Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் | [ Add new entry ] |
தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார். இன்சோம்னியா எனும் இந்த தூக்கமில்லா வியாதி தாக்கியபிறகு இவரை வேறு எந்த நோயும் அவ்வளவாகத் தாக்கவில்லையாம். அவர் இன்னமும் ஆரோக்கியமாக மற்ற விவசாயிகள்போலவே உழைத்தும் வருகிறார்.இவருடைய ஆரோக்கியத்திற்கு ஆதாரம் காட்டவேண்டுமானால், தாய்காக் 50எடையுள்ள இரண்டு உரமூட்டைகளை (தனித்தனியாகத்தான்)4கிலோ மீட்டர் சுமந்து கொண்டு வீடு வந்து சேருவதை சொல்லலாம். அவருடைய மனைவி,”எவ்வளவு மூக்கு முட்ட சாராயம் அருந்தினால் கூட அவரை சாய்க்க முடியவில்லை” என்று வருத்தப்படுகிறார்.”அவர் பெரிய பெரிய டாக்டர்களை கூட பார்த்துவிட்டார். கல்லீரலில் உள்ள சிறிய குறைபாட்டைத்தவிர, அவர் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சான்றிதழே கொடுத்துவிட்டார்கள்”என்கிறார். வியட்நாமில் உள்ள புஷி மலையின் அடிவாரத்தில் வசித்து வரும் தாய் காக் பன்றி மற்றும் கோழிப்பண்ணையை 24 மணிநேரமும் கவனித்து வருகிறார். அவருடைய பிள்ளைகள் 6 பேர் க்யூ ராங்க் என்கிற நகர் புறமொன்றில் வசித்துவருகின்றனர். தூக்க மாத்திரை போட்டுப் பார்த்தார், வியட்நாமின் மூலிகை வைத்தியங்களை செய்து பார்த்தார். எதுவும் அவருக்கு தூக்கத்தைக் கொடுக்கவில்லை.அதற்காக அவர் துக்கமும் படவில்லை. தூங்காத இரவுகளை என்ன செய்கிறாராம் இவர்.இரவு நேரத்தில் தனது பண்ணைகளை கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகிறார். குறிப்பாக 3மாதங்களில் இரண்டு குளங்களை தூர் வாறி ஆழப்படுத்தியிருக்கிறார். இவர் ஊருக்காகச் செய்யும் இன்னொரு உபகாரம் என்னத் தெரியுமா? ஊரில் யாராவது இறந்துபோனால், அவர்கள் வீட்டின் முன் இருந்தபடியே மேளம் (பறை போல) அடித்தபடியே இருப்பாராம்.இவர் காவல் காக்கும் நம்பிக்கையில் சாவு வீட்டார் கொஞ்சம் தலையைச் சாய்த்துக் கொள்வார்களாம். கரும்பு பயிரிடும்போது நட்டநடு இரவில் வேலைக்கு போக வேண்டிய விவசாயிகள் கூட தங்களை எழுப்ப, தாய் காக்கின் உதவியைத்தான் நாடுவார்களாம். இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதி பல்வேறு பாதிப்புகளை அவர்களுக்கு உண்டாக்கும்.ஆனால்,தாய் காக்கிற்கு எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாததுடன் அவருடைய ஆரோக்கியம் கெடாமலும் இருப்பது மருத்துவ உலகின் அதிசயம்தான். Source: http://www.tamilvanan.com/content/2009/08/10/old-man-goes-30-years-without-sleep/ | |
Views: 1901 | Comments: 1 | |
Total comments: 1 | |
. | |