12:10 PM தியாகி திலீபனின் வரலாறு நடிகர் நந்தா முழு வேகம்! |
போராளியே புலிக்கதைதான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்
கோடம்பாக்கத்தில்.சந்து பொந்தில் புகுந்தாவது சென்சார் சர்டிபிகேட்
வாங்கிவிடலாம் என்ற நோக்கத்தில் அதற்கேற்றவாறு திரைக்கதை அமைத்துக்
கொண்டிருக்கிறாராம் சமுத்திரக்கனி. சசிகுமார் நடிக்கும் இப்படம் இன்னும்
துவங்கப்படவே இல்லை. அதற்குள் பொறி பறக்கிறது. இதைப்போலவே பொறி பறக்கும் இன்னொரு செய்தி. ஆணிவேர் என்ற ஈழத்தமிழர்கள் அவலம் குறித்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒருவருமே முன் வராதபோது துணிந்து நடித்தவர் நந்தா. அன்றிலிருந்தே அவருக்கு ஈழம் தொடர்பான விஷயங்கள் மீது அக்கறையும், கருணையும் இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் விதத்தில் அவரே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து நடித்து வருகிறார். ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாறுதான் இது. இதில் திலீபனாக நடித்து வருவது நந்தாவேதான்! பாலா, அமீர் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை தமிழில் வெளியிட சென்சார் அனுமதி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் வெளிநாட்டில் ரிலீஸ் செய்து கொள்கிறேன். திலீபனின் வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும். அது முக்கியம் என்று கூறிவிட்டாராம் நந்தா. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது |
|
Total comments: 0 | |