10:29 PM நாகார்ஜுன் படத்தில் சரத்குமார் மகள் |
கொலிவுட்டில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சிம்புவுடன் இணைந்து போடா போடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது, நான் தமிழில் போடா போடி படத்தில் சிம்பு உடன் நடித்துள்ளேன். இந்தப்படம் தொடர்பான அனைத்து கட்ட பணிகளும் விரைவில் முடிந்து விடும். இதையடுத்து தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் நடிகர் நாகார்ஜுன் தயாரிக்கும் படத்தில் ராதாமோகன் இயக்கத்தில் நான் நடிக்கப்போகிறேன். எதிர்வருகிற மார்ச் மாதத்தில் இத்திரைப்படத்திற்கான வேலைகள் தொடங்கி விடும் என்று தெரிவித்துள்ளார். |
|
Total comments: 0 | |