வியாழன், 28/11/24, 1:17 PM
Welcome, Guest
Home » 2011 » கார்த்திகை » 5 » உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகளின் சந்தை.
3:46 PM
உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகளின் சந்தை.
உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகள் தொடர்பில் எமக்கு விளக்கம் தேவையில்லை.

காரணம் இவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளதுடன் நன்கு அறிந்தும் வைத்துள்ளோம்.

பொதுவாக உலாவி எனக்கூறும் போது நமக்கு முதலில் ஞாபகம் வருவது இண்டர்நெற் எக்ஸ்புளோரர் ஆகும்.

மைக்ரோசொப்டின் தயாரிப்பான இது இணைய உலகில் பல வருடங்களாக தனது ஆதிக்கத்தினை செலுத்திவந்தது.

எனினும் பின்னர் பயர்பொக்ஸ் மற்றும் குரோம் உலாவிகளின் வருகைக்குப் பின்னர் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் தனக்கான கேள்வியை இழக்கத்தொடங்கியது.

இயங்குதளம் எனக்கூறும் போது முதலில் ஞாபகம் வருவது விண்டோஸ் .அதன் பின்னர் லினக்ஸ், அப்பிளின் மெக் என்பவையாகும்

தேடல்பொறி என்றதுமே முதலில் கூகுள் எனக்கூறமுடியும் .பின்னர் யாஹூ, பிங் எனலாம்.

இவற்றைப்பற்றி நாம் அறிந்து வைத்துள்ள போதிலும் சந்தையில் அவற்றுக்கான நிலை என்ன என்பது எமக்குத் தெரியாது.

நெட்மார்க்கட் ஷெயார் எனப்படும் பிரபல இணைய ஆராய்ச்சி நிறுவனம் இவற்றின் தற்போதைய நிலை தொடர்பில் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

அது தொடர்பான ஒரு பார்வை இதோ:

உலாவிகள்

டெஸ்க்டொப் கணனிகளுக்கான உலாவிகளின் சந்தையில் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் 95 % தன்வசம் வைத்திருந்தது எக்ஸ்புளோரர் .எனினும் தற்போதைய சந்தைப் பங்கு வெறும் 52.6% மட்டுமே ஆகும்

வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பயர்பொக்ஸ் 22.5% குரோம் 17.6% ஆகியன எக்ஸ்புளோரரின் வீழ்ச்சிக்கு காரணாமாகும்.

எக்ஸ்புளோரரின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகள் ஊடான இணையப்பாவனை அதிகரிப்பினைக் குறிப்பிடலாம்.

கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகள் ஊடான இணையப் பாவனையின் போது அதிகம் உபயோகப்படுத்தப்படும் உலாவியாக சாபாரி காணப்படுகின்றது.

இதன் சந்தைப்பங்கு 62 % மாகும்.

இதில் அண்ட்ரோய்ட் மற்றும் ஒபெரா மினி உலாவிகள் முறையே 2 ஆம் மற்றும் 3 ஆம் இடத்தினைப் பெற்றுள்ளன.

இயங்குதளங்கள்

டெஸ்க்டொப் கணனிகளுக்கான இயங்குதளங்களுக்கான சந்தையில் இற்றை வரைக்கும் முதலிடத்தில் இருப்பது விண்டோஸ் ஆகும்.

அதன் அருகில் கூட மற்றவையால் நிற்க முடியவில்லை. காரணம் அதன்சந்தைப் பங்கு 91.9% ஆகும்.

கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளுக்கான இயங்குதள சந்தையில் ஐஒஎஸ் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் அண்ட்ரோய்ட் உள்ளது.

தேடல் பொறிகள்

டெஸ்க்டொப் கணனிகளின் தேடல் பொறி சந்தையில் கூகுளின் குரோம் முன்னணியில் உள்ளது .அதன் பங்கு 82.40 % ஆகும்.

கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களின் தேடல் பொறி சந்தையிலும் கூகுளே அதிகபங்கினைக் கொண்டுள்ளது.

இதில் யாஹூ இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது.

Views: 1029 | Added by: tamil | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]