திங்கள், 06/07/20, 8:10 AM
Welcome, Guest
Home » 2011 » கார்த்திகை » 5 » இன்று நவம்பர் 5, பேஸ்புக்கை ஹெக் செய்வதாக சவால் விடுக்கப்பட்ட தினம்: முடியுமா அவர்களால்?
3:39 PM
இன்று நவம்பர் 5, பேஸ்புக்கை ஹெக் செய்வதாக சவால் விடுக்கப்பட்ட தினம்: முடியுமா அவர்களால்?
இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு.இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம். 

எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது. 

இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து விடாத காரணம் அக்குழுவின் சில நடவடிக்கைகளாகும். 

கடந்த சில காலங்களாக பல முக்கிய நிறுவனங்களின் குறிப்பாக மாஸ்டர் கார்ட், பேபேல் மற்றும் அமெசொன் ஆகியவற்றின் இணையக்கட்டமைப்புகளை ஹெக்கிங் செய்திருந்தது. 

ஆனாலும் அக்குழுவால் பேஸ்புக்கினை வீழ்த்த முடியாமல் போனதா? அல்லது அத்திட்டத்தினைக் கைவிட்டுவிட்டதா? 

இது தொடர்பில் அக்குழு தகவல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. 

எனினும் இன்றைய தினம் முடிவதற்கு இன்னும் பல மணித்தியாலங்கள் உள்ளன. 

எனவே பொறுத்திருந்து பார்ப்போம்!
Views: 534 | Added by: tamil | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]