Home » Articles » சிறுவர் பூங்கா » சிறுவர்களுக்கான கதைகள் | [ Add new entry ] |
அதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து "அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்?" என்று கேட்டார். "வேறு யாருமல்ல நான்தான்" என்று கூறிச்சிரித்தவாறு முல்லா சென்று விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்து முல்லா அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தபின்பு மீண்டும் ஒருநாள் முல்லா அப்பணக்காரரிடம் வந்தார். "யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கஷ்டப்படுகின்றாராக்கும் அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க வந்நிருகின்றீராக்கும்" என்றார் செல்வந்தர். "ஆமாம்" என்றார் முல்லா. "அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே" என்று செல்வந்தர் கேட்டார். "இல்லை உண்ணமையிலையே ஒரு ஏளைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான்" என்றார் முல்லா. "உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை வாங்கிய பின் 'நான்தான் அந்த ஏழை' என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன நிச்சயம்" என்று செல்வந்தர் கேட்டார். "நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறேன்" என்றார் முல்லா. பிறகு வாசல்ப்பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். " நீர்தான் கடன் வாங்கி கஷ்டப்படும் ஏழையா? " என்று கேட்டார் செல்வந்தர். "ஆமாம்" என்று அந்த ஏழை பதில் சொன்னான். செல்வந்தர் முல்லா சொன்ன தொகையினை ஏழையிடம் நீட்டினார். அதனை முல்லா கை நீட்டி வாங்கிக்கொண்டார். " என்ன பணத்தை நீர் வாங்குகிறீர் பளையபடி என்னை ஏமாற்றுகிறீரா?" என செல்வந்தர் கேட்டார். " நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன்" என்று கூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு முல்லா நடந்தார். | |
Views: 2154 | |
Total comments: 0 | |