வியாழன், 28/11/24, 11:17 AM
Welcome, Guest
Home » Articles » சிறுவர் பூங்கா » சிறுவர் பாடல்கள் [ Add new entry ]

அன்பு தாயின் தாலாட்டு
ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!
Category: சிறுவர் பாடல்கள் | Added by: tamilan (28/06/09)
Views: 2268 | Rating: 5.0/1
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]