வியாழன், 28/11/24, 10:08 AM
Welcome, Guest
Home » Articles » காதலர் தேசம் » காதல் பிரிவுகள் [ Add new entry ]

பார்பதற்கு கண்கள் வேண்டாம்

புல்வெளியின்

மேல் நடந்துச் செல்கிறேன்

குழந்தையின்

பட்டுக் கேசம் போல்

பாதங்களை

புல் வருடுகிறது

ஏதோ

ஒரு காட்டுப்பூவை

தொட்டுப் பார்க்கிறேன்

அம்மாவின் கைகள்போல்

மென்மையாய்

இருக்கிறது

மரங்கள்

அடர்ந்த சோலையிலிருந்து

பறவைகள்

பஞ்சாயத்து பேசுவது

காதில் விழுகிறது

என்

இரவு உறக்கத்தில்

இந்த ஓசைத்தான்

கனவாக கேட்கிறது

நதியின் சலசலப்பில்

மீன்

துள்ளுவது மட்டும்

தனியாக

காதில் விழுகிறது

குட்டையின்

நடுவில்

தவளை குதிப்பது

கூட கேட்கிறது

நடந்து வரும்

பெண்ணின் வாசம்

நாசிவழி

கிளுகிளுப்பை ஊட்டுகிறது

அவளின்

சிங்கார

கொலுசு சத்தம்

என் காதல்

நெருப்பை மூட்டுகிறது

நான்

படிக்கும் எழுத்துக்களெல்லாம்

சலங்கை கட்டி

ஜதி பேசுகிறது

என் விரல் தொடும் போது

அறிவின்

வாசமாய் வீசுகிறது

பேசுகின்ற

வார்த்தையில்

மனித மனம் புரிகிறது

அவர்

உச்சரிக்கும் விதத்தில்

எச்சரிக்கை

மணி அடிக்கிறது

ஐம்புலனில்

ஒன்று செத்தால்

ஆறாம் புலன் விழிக்கிறது

பார்பதற்கு

கண்கள் வேண்டாம்

அறிவுதான் வேண்டுமென்ற

ஞானம் பிறக்கிறது

[img]http://4.bp.blogspot.com/_mXGon_GfcbA/THlMJJGoORI/AAAAAAAACkw/e1yAz3KqSUw/s1600/sri+ramananda+guruj+3.JPG[/img]



Source: http://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_28.html
Category: காதல் பிரிவுகள் | Added by: sriramanandaguruji (29/08/10)
Views: 1819 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]