Home » Articles » கணணி வளாகம் » இணையம் (internet) | [ Add new entry ] |
இணையத் தேடுதளங்களுக்கு இடையில் கடுயைமான போட்டி நிலவி வருகின்றது. இணையத்தில் தகவல்களை திரட்டுக் கொள்வதற்கு பல்வேறு சுலப வழிகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உலக இணைய தேடுதள ஜாம்பவான்களாக கூகிள் நிறுவனம் பரீட்சார்த்தமாக புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகம் செய்துள்ளது. கூகிளின் +1 தொழில்நுட்பம் தேடுதளங்களின் மூலம் இலகுவில் தகவல்களை பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது. +1 தொழில்நுட்பம் தொடர்பில் கூகிள் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி ஜிம் ப்ரோசர் விளக்களித்துள்ளார். ப்ரோசரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிகப்பட்ட பதில்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் எதற்காக இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றது? facebook இணையத்தளத்திற்கு போட்டியாகவும், இலகுவில் இணையத் தளங்களில் தகவல்களை தேடுவதற்கும் இந்த +1 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நண்பர்களிடம் ஆலோசனை கோருவது வழமையானது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூகிளின் +1 தொழில்நுட்பம் உதவியாக அமையும். தேடல்களை காத்திரமானதாக அமைத்துக் கொள்ள முடிகிறது. +1 தேடுதள தர வரிசையை பாதிக்குமா? இல்லை. எனினும், எதிர்காலத்தில் தரப்படுத்தலில் இந்த தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு கூகிள் எதிர்பார்க்கின்றது. +1 பட்டனில் காணப்படும் முகவரிகள் யாருடையது ? இவை கூகிள் முகவரிப் பட்டியலில் காணப்படும் முகவரிகள். கூகிள் உற்பத்திகளில் உள்ளடக்கப்படும் முகவரிகளே இவையாகும். குறிப்பாக ஜீமெயில்,பஸ் மற்றும் ரீடர் ஆகியவற்றில் காணப்படும் முகவரிகளாகும். பேஸ் புக் நண்பர்கள் +1 பட்டனைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா? அவ்வாறானதொரு சாத்தியங்கள் இல்லை. facebook இணைய சேவை மூடப்பட்ட ஓர் நண்பர்களுக்கு இடையிலான சேவையாகும். கூகிளின் +1 முறைமை திறந்த இணைய சேவையாகும். சமூக வலையமைப்புக்களை உள்ளடக்குவதற்கு கூகிள் முயற்சி மேற்கொள்கின்றது. எனினும் பேஸ் புக்கை இதில் இணைத்துக் கொள்ளும் திட்டம் கிடையாது. +1 பட்டன் facebook கின் Like பட்டனுக்கு நிகரானது. டுவிட்டர் தொடர்பில்? டுவிட்டருடன் +1 பட்டனை இணைப்பதற்கு தீர்மானிக்கவில்லை. ஏனைய சமூக வலை தளங்களிலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமா? பிளிக்கர் மற்றும் கியூரா ஆகிய சமூக வலைத்தளங்களுடன் இணைந்து செயற்படத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பரீட்சர்த்த முயற்சிகளின் போது இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாது. +1 தொழில்நுட்பத்தை எப்போது பயன்படுத்த முடியும்? இன்னும் சில மாதங்கள் காத்திருக்க நேரிடும். Google.com/experimental +1 இல் பேனர் விளம்பரங்கள் இணைக்கப்படுமா? தற்போதைக்கு அவ்வாறான வாய்ப்பு கிடையாது. எனினும் எதிர்காலத்தில் விளம்பரங்களை இணைக்கும் உத்தேசம் உண்டு. | |
Views: 1034 | |
Total comments: 0 | |