தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
- முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
- பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
- பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
- பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
- அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
- பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
- பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.
செய்முறை
- பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
- சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
- நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
- மற்ற செய்முறை மேற்கூறியவாறுதான்.
|