வியாழன், 28/11/24, 10:15 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » கணணி பற்றி தெரிந்துகொள்ள [ Add new entry ]

கண்களுக்கு கட்டுப்படும் கணணி
கண்களை பயன்படுத்தி கணனியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அதிசயம் என்பதோடு உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபடுகளையும் இது குறைக்கிறது.

அத்துடன் கணனியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவனதாக அமைகிறது.

Tobii Technology நிறுவனம் இந்த கண்களால் கட்டுப்படுதும் உலகின் முதலாவது மடிக்கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. இது இந் நிறுவனத்துடனான உருவனது. இது மார்ச் 1-5 வரை ஹனோவரில் நடை பெற்ற நிகழ்வில் கட்சிப்படுத்தப்பட்டது. இம் மடிக்கணணி ஒரு கணினியை கட்டுப்படுத்துவதற்கன அதிக பயன் விளைவான வழியை கொண்டுவருவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த வழியில் பயன்பட்டாளார்கள் கணணித்திரையில் ஒரு குறியீட்டை அல்லது கருவியை நோக்கியவுடன் முன்னையை விட அதிக தகவல் கட்சிப்படுத்தப்படும். அத்துடன் நீங்கள் படங்கள் அல்லது நிலவரை படங்களை மாறு உருப்பெருக்கம் செய்து பார்வையிட முடியும். மேலும் நீங்கள் பார்க்கும் பகுதியின் மையப்பகுதிக்கு தன்னியக்கமாகவே போக முடியும். உங்கள் கண்கள் எங்கே பார்க்கின்றன என்று தெரிந்து கொள்ளும் இயலுமையும் கணினிக்கு இருக்கும். இதன் பயனாக கண்கள் திரையைப்பார்க்காத வேளையில் கணணயின் திரையை மங்கச்செய்யவும் முடியும்.

தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணணி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணணியின் திரை, இயக்கும் நபரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே, கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி (கீழிறங்கி) செல்லும் வகையில் இந்த லேப்டாப் (Laptop) வடிவமைக்கப் பட்டுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர் (Eye Tracker), லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் (Infrared rays) பாய்ச்சுகிறது. இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளையும் விழித் திரைகளின் (Retina) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணணி செயல்படும் விந்தை நடக்கிறது.

Category: கணணி பற்றி தெரிந்துகொள்ள | Added by: tamil (25/05/11)
Views: 1296 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]