இணையம் மூலமான பண கொடுக்கல் வாங்கல் விடையங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்க
முடியம். சில பொருட்களை வாங்குவதற்காக இணையம் மூலம் பணம் செலுத்த வேண்டி
ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அடுத்த
பக்கத்தில் இருந்து உங்கள் கடன் அட்டை மூலம் பணத்தினை உங்களிடம் இருந்து
பெறுபவர் தொடர்பில் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். எந்த எந்த வகையில்
நாம் சரியான இடத்தில் தான் எமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோமா...
என்று பார்க்க முடியும். அதற்கான சில
நுட்பங்களை தொடர்ந்து
ஆராய்வோம். இந்த வேளையில் முதலாவதாக பார்க்க செய்ய வேண்டியது நீங்கள்
மூன்றாம் தர பண கொடுக்கல் வாங்கல் சேவையினை வழங்குகின்ற ஒரு நிறுவனத்தினை
தெரிவு செய்து கொள்ளவேண்டும். இது உங்களுக்கும் உங்களுக்கு பொருளினையோ
சேவையினையோ இணையத்தின் வாயிலாக வழங்குகின்ற இரண்டாவது நபருக்கும் இடையில் நின்று செயற்படும் ஒரு சேவையாகும்.
இவை இணையம் மூலமான பணப்பரிமாற்றத்தின் போது பாதுகாப்பானதும்,
துரிதமானதுமாக
பார்க்கப்படுகின்றது. மிகவும் சிறந்த ஒரு உதாரணம் PayPal சேவை. இவை போன்ற
சேவைகள் இணையத்தின் ஊடாக சேவையினை வழங்குபவர்களுக்கான பணத்தினை
செலுத்துவதற்கும், சிறிய இணையத்தளங்களில் இருந்து
இணைய பணக்கொடுகல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், சில காரணங்களுக்காக பண உதவிகளை செய்வதற்கும், மற்றும் உங்களுக்கு பிடித்தமானவரின்
கணக்குக்கு மின்னஞ்சலின் ஊடாக பணத்தினை அனுப்புவதற்கும் என பல சேவைகளின் பொருட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி ஒரு மூன்றாம் தர பணப்பரிமாற்ற சேவையினை தெரிவு செய்வது. இன்று பல இணைய
வர்த்தகங்கள் சில
சேவைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன. அத்துடன் முன்னணி இணைய வர்த்தக
இணையங்களே அதிகமான சேவைகளை ஏற்றுக்கொள்பனவாக இருக்கின்றன.
எப்படியிருந்தபோதும் நீங்கள் உங்கள் மூன்றாம்தர
செவையினை தெரிவு செய்கின்றபோது அவர்களுடைய கொள்கைகள் கட்டுப்பாடுகள் பற்றி தெளிவாக வாசித்து அறிந்து கொள்ளுங்கள் அதில்
உங்களுக்கு உடன்பாடு இருந்தால் மாத்திரமே அதனை தெரிவு செய்யுங்கள்.
அத்தோடு நம்பிக்கையின் முத்திரையான BBBOnline (the Better Business Bureau Online)
என்பதை இந்த நிறுவனம்
கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மற்றவர்கள்
இந்த நிறுவனம் பற்றி என்ன சொல்கிறார்கள் என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இவை அனைத்துக்கும் பிறகு உங்களுக்கு அந்த
நிறுவனத்தில் நல்
அபிப்பிராயம் ஒன்று ஏற்பட்டால் மாத்திரமே அந்த நிறுவனத்தை உங்கள் இணைய பண
கொடுக்கல் வாங்கல்களுக்கான மூன்றாம்தர சேவையாளராக தெரிவுசெய்யுங்கள்.
மூன்றாம் தரப்பு பணபரிமாற்ற சேவை ஒன்றில் கணக்கு ஒன்றினை ஆரம்பித்தபின் நீங்கள்
பாதுகாப்பாக இருக்க வேண்டிய சில இடங்கள் உண்டு. உங்கள் சேவையாளரின் மின்னஞ்சல் போன்றே சில திருடர்களின் மின்னஞ்சல்கள் உங்களுக்கு
வரலாம் அவை உங்கள்
கணக்கினை சரிப்படுத்தச் சொல்லியோ அல்லது மீண்டும் சில படிவங்களை நிரப்பச்
சொல்லியோ உங்களை கேட்கலாம். அவ்வாறான திருட்டுக்களில் இருந்து விலகி
இருப்பதற்கு நீங்கள் எச்சந்தர்ப்பத்திலும் உங்கள் முன்றாம்தர பணப்பரிமாற்ற
சேவையினை வழங்குகின்ற
நிறுவனத்தின்
மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவோ அவர்கள் கேட்டதை செய்யவோ முனையாதீர்கள்
அப்படி ஏதாவது மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டுமானால் நேரடியாகவே
அவர்களின் இணையத்திற்கு சென்று அங்கு செய்து கொண்ளுங்கள்.
உங்கள் மூன்றாம் தர
பணப்பரிமாற்ற சேவையாளரின்
இணையத்துக்கு செல்லும் போது நீங்கள் சில விடையங்களை கவனிக்க வேண்டும்.
அவர்களுடைய முகவரியை நேரடியாக நீங்களே உங்கள் உலாவியில் கொடுத்து
செல்லுங்கள் ஏனைய
தளங்களின்
இணைப்புக்களில் இருந்தோ அல்லது மின்னஞ்சல்களின் இணைப்புக்களில் இருந்தோ
பிரவேசிக்க வேண்டாம். மற்றையத நீங்கள் உங்கள் மூன்றாம் தரப்பு பண பரிமாற்ற
சேவையினை தருகின்ற நிறுவனத்தின்
இணையத்தில் இருந்து உங்கள் பணத்தினை ஒருவருடைய கணக்கிற்கோ மின்னஞ்சலுக்கோ மாற்றுகின்ற போது நீங்கள் பணம் அனுப்பும் மற்றைய நபர்
தொடர்பில் தெளிவாக இருங்கள்.
இறுதியாக
இணையம் மூலம் மூன்றாம் தரப்பு பணப்பரிமாற்றத்தினை பயன்படுத்தி விலைகூடிய பொருள் ஒன்றினை வாங்குவதற்காக நீங்கள் பணத்தினை
செலுத்துவதற்கு முன்பு
அந்த பொருள் களஞ்சியத்தில் இருப்பில் இருக்கின்றதா அல்லது விற்று
முடிந்துவிட்ட ஒரு பொருளுக்குத்தான் நீங்கள் பணம்
செலுத்திக்கொண்டிருக்கின்றீர்களா என்பது தொடர்பில் மிக கவனமாக
நடந்து கொள்ளுங்கள். அவை நீங்கள் இணையவர்த்தகத்தில் பங்கு கொள்கின்றபோது உங்கள் பணக் கொடுக்கல் வாங்கல்களை
இலகுபடுத்தும் மூன்றாம் தரப்பு பணப்பரிமாற்ற சேவையினை பற்றிய சில குறிப்புக்கள் மைக்றோசொவ்ட் இணையத்தின் தகவல்களை தழுவியவை.
Source: http://tamilnotes.com/content/blogcategory/38/305/ |