வியாழன், 28/11/24, 12:12 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

காதலர் தினம்!

இனம் மதம் மொழி கடந்து
இதயங்கள் இரண்டு
இரண்டறக் கலப்பு.

இதயத்தின் துடிப்பு
லப் டப் மறந்து
இரவு பகலாய்
உனது பெயரை
உரக்கச் சொல்லும்

உதிர்க்கும் பேச்சும்
வெளிவரும் மூச்சும்
உன்னைச் சுற்றியே
சிறகு விரிக்கும்.

காதல் என்றும் சுகமானது
கனவுகளும் நினைவுகளும்
புது விதமானது.

புதியதோர் உலகம்
புதுமையாய்த் தெரிய
இரவுகள் எல்லாம்
உறக்கங்கள் தொலையும்.

ஆகாய வெளியில்
கால்கள் நடக்க
பயணச் சீட்டின்றி
பயணங்கள் தொடரும்.

வாழ்வனில் இனிமை
காதலில் பிறக்கும்.
பரிசுத்தமான காதல்
புனிதமாய் ஒளிரும்.

சுமைகளைத் தாங்கும்
சுமைதாங்கி போலே
உண்மைக் காதல்
உயிராய்த் துடிக்கும்.

சோகத்தில் மனது
துவழும் போது
உள்ளத்தை மெதுவாய்
இதமாய்த் தழுவி
உண்மைக் காதல்
உயிர்ப்பைக் கொடுக்கும்.

கொழுகொம்பு தேடும்
உண்மை அன்பு
கொடியெனப் படர்ந்து
மலர்வது காதல்!

வாழ்க்கை என்பதை
எத்தனை தடவை
வாழப் போகின்றோம்?
வாழ்வு என்பது
ஒருமுறை தானே!

வாழ்க்கை தன்னில்
பிடிப்பைத் தந்து
ரசிப்பாய் வாழ
காதல் வேண்டும்.

காதல் இல்லா
வாழ்வு அதுவும்
வறண்ட பூமியாய்
காய்ந்து பிளந்து
வாழ்க்கை வெறுத்து
இடறியே வீழும்.

ஈருயிர் இணைந்து
பிறப்பொன்று கொண்ட
அழிவிலா வாழ்வுடன்
புதிதான உதயம்!

இது தோன்றுவதும் அதிசயம்
தோன்றாமல் இருப்பதுவும் அதிசயம்.

பிறந்த தினம் மறந்து
பிரிந்த மனம் தவித்து
கண்ணீர் காணாத நாளொன்று
கண்டதில்லை நான்.

வருடத்தில் இந்நாளாவது
வாழ்ந்திட வேண்டும் இணைந்து
அதற்காக என்னிடம் கேட்டால்
தினம் ஒன்று இங்கு
போதாது என்பேன்.

திக்கெட்டும் போற்றட்டும்
காதலின் புகழை!

திகட்டாத இன்பத்தின்
தித்திக்கும் சுகங்களை
முடிவின்றி மீட்டிட…

என்னிடம் கேட்டால்
தினம் ஒன்று இங்கு
போதாது என்பேன்.

இரண்டு மனங்களின்
இன்ப இணைப்புக்கு
தினமும் தோன்றட்டும்
காதலர் தினமாய்!
Category: காதல் கவிதைகள் | Added by: tamilan (16/02/10)
Views: 1451 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]