திங்கள், 29/11/21, 9:49 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

வாழ்வில் நீயின்றி எனக்கு பயனேது !

வானின்றி நிலவுக்கு
வடிவேது  ?
வாழ்வில்  நீயின்றி
எனக்கு பயனேது !

மலரின்றி வண்டுக்கு
தேனேது ?
மனதில் நீயின்றி
எனக்கு நிம்மதியேது !

மழையின்றி பயிருக்கு
வழியேது ?
நீயின்றி
எனக்கு உயிரேது !

இசையின்றி இவ்வுலகில்
வாழ்வேது ?
இமைப்பொழுதில் நீயின்றி
எனக்கு இன்பமேது !

நிலவின்றி வானுக்கு
ஒளி ஏது?
நீயின்றி இங்கு
நானேது !

நீயின்றி இங்கு
நானில்லை...!!
நினையின்றி வாழ்ந்து
பயனில்லை..!!

உனையன்றி எனக்கு
உறவில்லை...!!
உறக்கமின்றி உனக்காய் ....
ஒரு உள்ளம்.

Category: காதல் கவிதைகள் | Added by: tamil (13/01/12)
Views: 1504 | Rating: 1.5/2
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]