வியாழன், 25/04/24, 10:09 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » காதல் கவிதைகள் [ Add new entry ]

இப்படித்தான் இன்று வன்னிக் காதல்
இப்படித்தான் இன்று வன்னிக் காதல்

கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.

புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்
படுத்து உறங்குகிறேன் இன்று.
பண்ணிசை மன்னனே...... உன்
பாட்டு என்னிடம்............!!!

மழையே.......... மழையே........!
ஏன் இந்த சோகம்.
மனமே............ மனமே............!
ஏன் இந்த வாதம்.
வாழ்வில் ஒரு படி
வாழவில்லை என் காதல்.
பூவின் மணம் போல்
பூக்க வில்லை நம் காதல்.
தேனே.......நீ........ எங்கே.......?
தேடுகிறேன்........உன் பாதம்...!!

விதியே...........விதியே..........!
ஏன் இந்தக் கோலம்.
சதியே.......... சதியே...........!
ஏன் இந்தப் பாவம்.
திரி கொண்ட தேசம்
தீர்ப்புக் கிடைக்கவில்லை இன்னும்
வெறி கொண்ட வேதம்
வெந்து போனது எம் தேசம்
மனமே.......... நீ உள்ள தூரம்
என்னை அழைக்க மறந்து விடாதே ...!!

எரி குண்டே ....... எரி குண்டே.......!
ஏன் இந்த நாசம்
வான் குண்டே......வான் குண்டே......!
ஏன் இந்த அகோரம்.
கூடு விட்டு கூடு வந்த
நம் காதல் சேர முன்.
என் இதயத்தைப் பறித்துவிட்டாயே.
இதயமில்லாக் குண்டே.....
இனி என் வாழ்வு
இருட்டுக்குள் சங்கமம் தனா...?...?...?

Category: காதல் கவிதைகள் | Added by: tamilan (21/07/09)
Views: 890 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]