வியாழன், 28/11/24, 12:20 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » நட்பு கவிதைகள் [ Add new entry ]

உண்மை உலகறியும்
தினமும் தினமும்
கொள்ளும் உன்
நினைவுகள்

என்
உயிரில் உயிரில்
கலந்தே நிறைந்திருக்கும்

வானும் மண்ணும் போதாதே
உன் அன்பிற்கு ஈடு கொடுக்க

வானமாகி நீயும்
நிலம் போலே நானும்
இருப்போமே நாம் _ நம்
வாழ்வில்

பிரிந்தே இருந்தாலும்
வானின்றி நிலமில்லை
உணரும் சமூதாயம் - நம்
நட்பை

காலம் பதில் சொல்லும்
வாழ்க்கை முடிகையில்
வாழ்வோம் வாழ்வோம் - நாம்
நண்பர்களாக

ஓர் நாளும் வரும்
அருகருகே நாம் இருப்போம்
மடிவேனே நான் - உன்
மடி மீதே

பார் கண்ட நட்புகள்
பலவென இருந்தாலும்
பாரும் வியக்கும் - நம்
நட்பை

Category: நட்பு கவிதைகள் | Added by: தமிழ் (28/07/10) | Author: தமிழ் மதி
Views: 4897 | Comments: 10 | Rating: 3.0/3
Total comments: 10
.
.
.
.
.
.
.
.
.
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]