Home » Articles » கவிதைகள் » உறவு கவிதைகள் | [ Add new entry ] |
நீதானே அம்மா!
எனக்கு அறிமுகப்படுத்தி! இன்றுவரை அளவின்றி அளிப்பவள் நீதானே அம்மா! என் தேவைகளை பூர்த்தி செய்வதற்க்காக! உன் தேவைகளை குறைத்துக் கொண்டவள்! நீதானே அம்மா! பொது நலத்திலும்! சுயநலத்தைக் காட்டும்! சிலரைப்போல இல்லாமல்! சுயநலத்திலும் சிறிது பொதுநலத்தைப் பார்ப்பவள் நீதானே அம்மா! சில நாட்கள் நீ ஊரில் இல்லாவிட்டால்! உருமாறிப்போகும் நம் வீட்டை! என்றும் அழகுபடுத்துபவள் நீதானே அம்மா! உனக்கு கொடுக்காமல் நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்! எனக்கு எடுத்து வைக்காமல்! எதுவும் சாப்பிடாதவள் நீதானே அம்மா! என் உடலில் ஏற்ப்படும் காயத்தின் வலிகளை! உன் மனதில் உணர்பவள் நீதானே அம்மா! என்னதான் சண்டையிட்டாலும் சாப்பிடும் நேரத்தில்! சமாதானத்திற்க்கு வருபவள் நீதானே அம்மா! சமைக்கும் அனைத்து உணவிலும், அன்பையும் கலந்து! அதன் சுவையை அதிகரிப்பவள் நீதானே அம்மா! அப்பாவின் உழைப்பையும்! வீட்டின் நிர்வாகத்தையும்! சிக்கனத்துடன் சிறப்பாக வழி நடத்திச் செல்பவள்! நீதானே அம்மா! சிறுபிள்ளைத் தனமாக தவறுகள் செய்தால்! பிறரைப் போல தண்டிக்காமல்! சரியானதைச் சொல்லி கண்டித்து! அழுது நடித்தால்! அதையும் மன்னிப்பவள் நீதானே அம்மா! "ஒரு குடும்பம் அழிந்து போவதற்கு! யார் வேண்டுமானலும் காரணமாக இருக்கலாம்! நன்றாக இருப்பதற்ககு ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"! என்ற உலக கருத்தின்படி! நம் குடும்பத்தின் நலத்திற்கு அது நீதானே அம்மா! இன்னும் பல ஜென்மங்கள் இருக்குமென்றால்! அதிலும் நீயே என் தாயாக வேண்டுமென! கேட்டு! கடவுளிடம் தொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா! இந்த ஜென்மத்தில்! நான் பெற்ற நன்மைகள்! வரும் ஜென்மங்களில் இன்னும் சிலருக்கு ! கிடைக்கட்டும் அம்மா | |
Views: 13851 | Comments: 2 | |
Total comments: 2 | |
. . | |