எத்தனை இனியவள் என் அம்மா சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது அவளை எச்சில் படுத்தி இருப்பேனே எத்தனை உயரம் என் அப்பா ... சிறு குழந்தையாய் இருக்கும் பொழுது அவரை எட்டி உதைத்திருப்பேனே ... கண்ணாடி முன் நின்று தன்னம் தனியாய் ஆடிப் பார்க்கையில் - ஒளிந்திருந்து பார்த்து மெதுவாய்த் தன்னை வெளிப்படுத்தும் அம்மா என் வெட்கச் சிரிப்பை உன் முந்தானைக்குள்ளேயே வாங்கிக்கொண்டு சிரிப்பது இனிமை சைக்கிள் ஓட்டிக் கீழே விழும் போது சைக்கிள் தூக்கி ஓட்டச் சொல்லும் அப்பா ... நீங்கள் தன்னம்பிக்கை வளர்த்த விதம் அருமை இன்று சொந்தக் காலில் நிற்பதாய் எண்ணிக்கொண்டு நீங்கள் - பானமும் பாசமும் ஊட்டி வளர்த்த காலில் நிற்கும் பொழுதும் - அதனையும் பெருமையாய்ப் பார்க்கும் என் இனிய அம்மா, அப்பா ... உங்கள் அன்பு எனக்கு இன்னமும் வேண்டும்... அதில் மட்டுமே என் சந்தோஷம் ஜன்மங்கள் தாண்டும் ... |