Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் | [ Add new entry ] |
ஒர் ஏழை தமிழனாக
பெரிய கோயிலை - என்னுடன் சுற்றினான் ஒரு வெள்ளையன் அவன் எந்நாடு என்று நானறியா - இருந்தும் என்னாட்டுக் கலை கண்டு வாய்ப்பிளந்த போது எனக்குள் ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ... வானுயர்ந்த கோபுரம் போல் என்னாடே உயர்ந்தது என்று தலைநிமிர்ந்து திரும்பினேன் ... கோயில் தலைவாசலில் - அந்த அந்நியனைச் சுற்றி ஒரு கூட்டம் இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ... சற்று முன் தலைக்கேறிய தலைக்கணத்தில் தலைக் கவிழ்ந்து நடந்தேன் ... ஒர் ஏழை தமிழனாக ...!!! | |
Views: 1591 | |
Total comments: 0 | |