திங்கள், 29/11/21, 10:20 AM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

உன் பிரிவால் துயறுற்றோம்...!!!
ஏழேழு பிறப்புகள் இவ்வுலகில் உண்டா – என்னை
கேட்டால் இல்லை என்பேன்...
அப்படி இருந்தால் தாயே மகனாய் – உனக்கு
பிறக்க தவமாய் தவமிருப்பேன்...!
யாருக்கு கிடைக்குமுன் வயிற்றில் பிறக்க – எம்
மன்னனைப் போல்நல் அவதாரமெடுக்க...!
மண்தோன்றா முன் தோன்றிய தமிழ் மானம்காக்க – பின்
தோன்றிய கரிகாலப் புலிமன்னனன்றோ...!
வில்லெடுத்து போரிட்ட காலங்கள்மாறி – அமைதி
சொல்லெடுத்து போரிட்ட காலத்தில் வாழ்ந்து...!
எம்நாடு, எம்இனம், எம்மக்கள் என்ற நிலைமாற்றி – எம்மை
அடிமையாக்கவந்த பகைவர் கூட்டத்தை... துடக்கெடுத்து
விரட்டவந்த வீரப்புலியன்றோ...!
தமிழின் பெருமையை உலகறிய வைத்தவன் – தன்மான
உணர்ச்சியை தாய்க்கருவிற்கும் ஊட்டியவன்...!
விடுதலைப்போர் வரலாற்றில் முப்படைகண்ட
முதல் தமிழன்...!
விடுதலைக்காய் உறுமிவந்தான் எம்தலைவன் - வியக்க
வைத்தான் உலகத்தை அவன் போர்திறத்தால்...!
பலபிறவிகள் கண்ட பகுத்தறிவாளன் – எம்தலைவன்
பகைவரும் போற்றும் பண்பாளன்....- அந்த
பார்போற்றும் பகலவனை பாருக்கு தந்தவரே...- எம்
ஈழத்து விடிவிக்காய் கடுந்துயர் தானுற்று...!
சுவாசத்தை உனக்கீந்த தாய்மண்ணில்- தன்
சுவாசத்தை மானத்தோடு பிரிந்தாயோயம்மா...!!
அம்மா...
உன் பிரிவால் துயறுற்றோம் உலகமேல்லாம்...!!
ஒன்றுசேர்வோம் உங்கள் நினைவோடு...
உறுதியம்மா வெல்வோம் ஈழம்...!!!
Category: ஏனைய கவிதைகள் | Added by: tamil (24/02/11) | Author: உதய்
Views: 1335 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]