வியாழன், 28/11/24, 12:31 PM
Welcome, Guest
Home » Articles » கவிதைகள் » ஏனைய கவிதைகள் [ Add new entry ]

தமிழா
எம்மினமே உன்நெஞ்சில் ஈரமில்லையா?
இன்னும் என்ன அழியணும்
என்று பார்த்துக் கொண்டு இருக்கிறாய்
உன் தாய் தந்தை சகோதரம் இரத்த வெள்ளத்தில்
இதையும் பார்த்துக்கொண்டா
நீ வீட்டில் நிம்மதியாய் உறங்குகின்றாய்

உன் மனதில் குற்ற உணர்வு தோன்றவில்லையா
உன் நாட்டுக்கு எதிரானவனாய் இருக்கின்றாய் என்று
உன் பணி என்ன உன் தாய் நாட்டுக்காக
என்னும் புரியவில்லையா உனக்கு

எழுந்திடு தமிழினமே எம்மோடு சேர்ந்து குரல் கொடுக்க
இந்த உலக நாடுகளுக்கு புரிய வைப்போம்
எம் தமிழின உணர்வுகளை

உன் பிள்ளை உன்னை பார்த்துக் கேட்கும்
உன் தாய் நாட்டுக்காக என்ன செய்தாய் என்று
அப்பொழுது வருந்தாதே எதுவும் செய்யåல்லை என்று

இரத்த கடலில் குழிப்பது சிங்களம் அல்ல
உன் சொந்த இரத்த உறவுகள்
எப்பொழுது புரியும் உனக்கு இவை எல்லாம்

அழுது அழது அலுத்து போய்விட்டது
கேட்டு கேட்டு சலித்துப் போகின்றது
ஆனாலும் நம் நம்பிக்கை மட்டும் அழியாது
வந்து நம்முடன் சேர்ந்திடு உரத்த குரல் கொடுப்போம்
இவ் உலக நாடுகளுக்கு புரிய வைப்போம்

எம் தலைவன் உயிருடன் இருக்கும் பொழுதே
கொல்லப்பட்டு விட்டாதாக எத்தனை வதந்திகள்
இதனை அறிவு கெட்ட சிங்களமும்
அழிவை கண்மூடி பார்த்துக்கொண்டு இருக்கும்
அனைத்து உலக நாடுகளும் நம்பிவிடலாம்
ஆனால் நாம் மட்டும் நம்ப மாட்டோம்
இது சிங்களத்தால் நம் தலைவனை எப்பொழுதும்
அழித்து விட முடயாது என்ற உண்மையை மட்டும்தான் சொல்கிறது
எம் தலைவன் சிரஞ்சீவி அவனை யாராலும் அழித்திட முடயாது
எம்தலைவன் காலத்திலே நாம் தமிழீழம் வெண்றெடுப்போம்

Category: ஏனைய கவிதைகள் | Added by: (14/07/09) | Author: வைஸ்ணவி
Views: 1261 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]