Home » Articles » கணணி வளாகம் » இணையம் (internet) | [ Add new entry ] |
கூகுள் ஜிமெயில் சேவைக்கு ஈரான் அரசு திடீரென தடை விதித்துள்ளது. அதற்குப் பதில் அரசே ஒரு இமெயில் சேவையத் தொடங்கப் போகிறதாம். இதுகுறித்து வால் ஸ்டிரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தி.
ஈரான் அரசு ஜிமெயில் சேவையைத் தடை விதித்துள்ளது. அதற்குப் பதில் மக்களுக்கும், அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான மாற்று மெயில் சேவையை தொடங்க அது திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஈரானின் தொலைத் தொடர்புத் துறை எடுத்துள்ளது. சமீப காலமாக பேஸ்புக், ட்வீட்டர், யூடியூப் ஆகியவற்றைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சியினரின் செயல்களை அரசு உளவு பார்ப்பதாக ஈரான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தப் பின்னணியில் ஜிமெயிலைத் தடை செய்ய ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. ஈரானில் மிகவும் பிரபலமாக உள்ள மெயில் சேவையாக ஜிமெயில் திகழ்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஜிமெயில்தான் டாப்பில் உள்ளது. அதேபோல எதிர்க்கட்சியினரும் கூட ஜிமெயிலைத்தான் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இது ஈரான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதால் இந்த தடை நடவடிக்கையை அது மேற்கொண்டுள்ளது. தங்களது மெயில் சேவைக்கு ஈரான் அரசு தடை விதித்திருப்பது குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. சமீபத்தில்தான் சீனாவில் கூகுளுக்கு சிக்கல் வந்தது. இப்போது ஈரானிலும் அதற்கு தடை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. | |
Views: 988 | |
Total comments: 0 | |