வெள்ளி, 29/03/24, 1:10 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » இணையம் (internet) [ Add new entry ]

பிரிட்டன் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பேஸ்புக்கின் நிலை?

சமூக வலைத்தள தரவுகள் சேகரிப்பின் கணிப்புப்படி பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பேஸ்புக் பாவனை குறைவடைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் கிட்டத்தட்ட 6 மில்லியன் அமெரிக்கர்கள் பேஸ்புக் பாவனையைக் கைவிட்டுள்ளதாக ‘இன்சைட் பேஸ்புக்’ தெரிவித்துள்ளது. மே மாதத் தொடக்கத்தில் 155.2 மில்லியன் அமெரிக்கப் பாவனையாளர்கள் இருந்தனர். அம்மாத முடிவில் 149.4 மில்லியன் பாவனையாளர்களாக எண்ணிக்கை குறைவடைந்திருந்தது. ஒப்பீட்டளவில் இது 3.7 வீதமான வீழ்ச்சியை காட்டுகிறது.

இதேவேளை, பிரிட்டனில் பேஸ்புக் கிட்டத்தட்ட 100,000 பாவனையாளர்களை இழந்துள்ளது. இதேபோன்ற சரிவுகளே நோர்வே மற்றும் ரஷ்யாவிலும் பதிவாகியிருக்கின்றது. இந்த வலைத்தளம் உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்து வருகின்றபோதிலும் கடந்த மாதங்களில் இந்த வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் மே மாதத்தில் 11.8 மில்லியன் பாவனையாளர்களைப் பெற்றிருந்தது. ஏப்ரல் மாதத்தில் 13.9 மில்லியனாக அது அதிகரித்தது.

‘குறிப்பிடப்பட்ட சில நாடுகளில் பேஸ்புக் பாவனை 50 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகளாவிய ரீதியல் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை 700 மில்லியனாக அதிகரிக்க உள்ளது. காரணம் மே மாத இறுதியில் பாவனையாளர்களின் எண்ணிக்கை 687 மில்லியனாக இருந்தது.

மக்கள் தொகை அதிகமுள்ள வளர்ந்துவரும் நாடுகளான மெக்சிகோ, பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் பேஸ்புக் பாவனை அதிகரிப்பில் சவால்களும் வீழ்ச்சிகளும் உள்ளன,’ என ‘இன்சைட் பேஸ்புக்’ தெரிவித்துள்ளது.

eBay மற்றும் Google சீனாவில் கடினப்போக்கை எதிர்கொண்டுவரும் நிலையில் 500 மில்லியன் இன்டர்நெற் பாவனையாளர்கள் உள்ள சீனச் சந்தையில் பேஸ்புக் நுழையத் திட்டமிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு Google சீனாவிலிருந்து வெளியேறியது. இணையத் திருட்டு, தணிக்கை போன்ற விடயங்கள் பேஸ்புக்கிற்கும் அங்கு முட்டுக்கட்டையாக அமையும்.

இந்நிலையில் அரச அழுத்தங்களுக்கு வளைந்து கொடுப்பீர்களா இல்லையா என்ற கேள்விக்கு இதுவரை கம்பனி அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

Category: இணையம் (internet) | Added by: tamil (20/06/11)
Views: 1110 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]