வியாழன், 28/11/24, 10:16 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » மென்பொருட்கள் [ Add new entry ]

விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளத்திற்கு MultiBoot USB டிரைவ் உருவாக்குவதற்கு.
விண்டோஸ் 7 மற்றும் XP இயங்குதளங்களை USB பென்டிரைவ் மூலம் கணணியில் ஏற்றிக் கொள்ளலாம்.

இந்த செயல்முறையை நான்கு இலகுவான படிமுறைகளை கொண்டு multiboot USB டிரைவ் மூலம் செயல்படுத்தலாம்.

இந்த செயல்முறையை ஆரம்பிப்பதற்கு முன்பு உங்களது USB கட்டாயம் 4 GB அல்லது 8 GB யாக இருக்க வேண்டும். அத்துடன் FAT32 கோப்பு கணணியுடன் போர்மட் பண்ணி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அனைத்தையும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் WinSetupFromUSB என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின்னர் அந்த மென்பொருளை உங்களது கணணியில் திறந்து கொள்ள வேண்டும்.

1. முதலில் நீங்கள் போர்மட் செய்த USB டிரைவை கணணியில் புகுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் தரவிறக்கம் செய்த WinSetupFromUSB_1-0-beta7.exe கோப்பை செயலாக்கம்(Run) செய்யுங்கள்.

2. அந்த மென்பொருள் உங்களது USB யை கண்டுபிடிக்கின்றதா(detect ) என உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. அடுத்து Windows 2000/XP/2003 Setup என்ற படிமத்தில் Windows XP installation கோப்பின் இடத்தை தெரிவு செய்வதுடன், அருகில் உள்ள சரிபார்க்கும் பெட்டியையும்(check box) தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து Vista/7/Server 2008 Setup/PE/RecoveryISO என்ற படிமத்தில் Windows 7 installation கோப்பு உள்ள இடத்தை தெரிவு செய்தவுடன், இந்த இரண்டு சந்தர்ப்பத்திலும், உங்களிடம் Operating சிஸ்டம், ISO images யாக இருக்கும் என்றால் அதை WinRar or 7-Zip கொண்டு Extract செய்ய வேண்டும்.

4. இறுதியாக GO என்ற பொத்தானை அழுத்தினால் போதும் அது தன் வேலையை தொடங்கி விடும்.

தரவிறக்க சுட்டி

Category: மென்பொருட்கள் | Added by: tamil (18/12/11)
Views: 1083 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]