இன்று பலரும் MicroSoft நிறுவனத்தை பெரிதும் விரும்பாமல் இருக்கக் காரணம், அந்த நிறுவனம் மெதுவாக ஒரு மென்பொருள் ஏகாதிபத்யமாக மாறத் துவங்கியது. ஏகாதிபத்யம் என்றால், அந்த தொழிலில் அவர் வைத்தது தான் சட்டம். போட்டியாளர் யாருமே இல்லாத ஒரு சர்வதிகார நிலையை ஏற்படுத்த முயல்வது.
அதே போன்ற ஒரு சூழ்நிலையை Google ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. Google Search Engine தான் அதன் முதுகெலும்பு.
இணைய விளம்பர தொழிலில் அதன் போட்டியாளரான DoubleClick நிறுவனத்தை வாங்கிவிட்டது.
அதன் அடுத்த நிலை விளம்பர போட்டி நிறுவனங்களை (TextLinkAds, BuySellAds) நசுக்க முயற்சிக்கிறது.
ஒரு இணையதளம் நல்ல எதிர்காலம் கொண்டதாக இருக்கும் போது, அதை போலவே ஒரு Clone இணையதளத்தை உருவாக்கி அந்த நிறுவனத்திற்கு போட்டியாக வெளியிடும். பின்பு அந்த போட்டி நிறுவனத்தை 250-300% அதிக விலை குடுத்து வாங்கிவிடும். இதற்கு "FeedBurner” ஒரு சிறந்த உதாரணம்.
தற்போது Digg.com & Twitter.com போன்ற மிகச்சிறந்த Social Networking பக்கம் தனது பார்வையைத் திருப்பி உள்ளது.
iPhone, Symbion, PalmOS , J2ME & .NET Mobile SDK போன்ற மொபைல் மென்பொருள் தொழில்நுட்பத்தில் தனது Andriod Project ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எண்ணுகிறது.
இறுதியாக, "Chromium Project” மூலம் Desktop/PC வர்த்தகத்தில் இருக்கும் Windows/Linux/Mac உடன் போட்டி போட முயல்கிறது.
அனைத்து துறைகளிலும் சிறந்த போட்டியாளர் இருப்பது வாடிக்கையாளர்களுக்கு நல்லது தான். ஆனால் எப்பொழுது ஒரு நிறுவனம், தான் மட்டுமே தொழிலில் இருக்க வேண்டும் என எண்ணுகிறதோ அதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
வசதிகள் மிகக் குறைவாக இருப்பினும் சிலர் இந்த ப்ரௌஸர் Google வெளியிட்டது, என கண்மூடித்தனமாக Chrome உபயோகிக்கின்றனர்.
Mozilla Firefox போன்று Chrome Opensource Software இல்லை.
Mozilla Firefox, Orkut & Youtube போன்ற சிறந்த கண்டுபிடிப்புகள் Googleலால் வாங்கப்பட்ட நிறுவனங்கள்.