வியாழன், 28/11/24, 10:13 AM
Welcome, Guest
Home » Articles » கணணி வளாகம் » இணையம் (internet) [ Add new entry ]

பேஸ்புக் Timeline-ல் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்
சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் டைம்லைன் என்ற புதிய வசதியை அனைவருக்கும் வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

எனினும் இதை பயன்படுத்தாமல் இன்னும் பலர் இருக்கலாம். அவர்களுக்காகவும் மற்றும் ஏற்கனவே டைம்லைனுக்கு மாறியோர் கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

ஆக்டிவேட் செய்வது எப்படி?

இதைச் செயற்படுத்துவது மிக இலகு முதலில் பேஸ்புக்கில் லொகின் செய்துகொள்ளுங்கள். பின்னர் https://www.facebook.com/about/timeline என்ற முகவரிக்குச் சென்று Get Timeline பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

7 நாட்கள் அவகாசம் ஏன்?

பேஸ்புக் டைம்லைனை ஆக்டிவேட் செய்ததும் Welcome to Your Timeline (7-Day Preview)

Only you can see your timeline during your 7-day preview. This gives you a chance to: 1. Review what's on your timeline now, and add or hide whatever you want என்ற தகவல் தோன்றும்.

டைம்லைனில் தேவையான மாற்றங்கள் மற்றும் பிரைவசி தொடர்பான விடயங்களை கவனமாக நீங்கள் சரி பார்த்துக்கொள்ளவே இந்த கால அவகாசம் தரப்படுகின்றது.

அனைத்தையும் சரி பார்த்து விட்டேன் எனது பேஸ்புக் புரோபைல் டைம்லைன் வசதிக்கு முழுதுமாக மாறி அனைவருக்கும் தெரியும் படி செய்யட்டும் என விரும்புபவர்கள் உடனேயே Publish Now ஐ அழுத்திவிடுங்கள். அல்லது

டைம்லைனில் உங்களின் தனிப்பட்ட விபரங்கள் தொடர்பான மாற்றங்களைச் செய்வது எப்படி?

உங்கள் புரோபைலில் தெரியும் குறிப்பிட்ட தகவல்களை டைம்லைனில் இருந்து நீக்க வேண்டுமாயின் அதற்கு மேலே தெரியும் பென்சில் அடையாளமிடப்பட்ட ஐகானை கிளிக் செய்து edit or Remove ஐ அழுத்துங்கள்.

அதில் தோன்றும் விண்டோவில் தெரியும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப டைம்லைனில் இருந்து நீக்க மற்றும் முழுதுமாக அழித்துவிட திகதியை மாற்றுவதற்கு போன்றவற்றை செய்ய முடியும்.

பேஸ்புக் டைம்லைனில் நீங்கள் விரும்பும் போஸ்ட்களை பெரிதாக காட்டுமாறு செய்வது எப்படி?

இதற்கெனவே இருக்கின்றது Feature ஐகான். விரும்பும் போஸ்ட்களை தெரிவு செய்து பென்சில் ஐகானுக்கு பக்கத்தில் தெரியும் Feature ஐகானை கிளிக் செய்யுங்கள்.

இவற்றைச் செய்த பின்னர் Publish Now என்பதை கிளிக் செய்துவிடுங்கள்.

டைம்லைனை மாற்றாமல் விட்டால் என்ன நடைபெறும்?

டைம்லைனை தொடமாட்டேன், ஆனால் பேஸ்புக்கில் வழமையான நடவடிக்கைகளை தொடருவேன் என்பவர்களுக்கும், இம்மாதம் 22ம் திகதியுடன் பேஸ்புக் புரோபைல் டைம்லைனுக்கு மாறித்தான் போகும்.

Category: இணையம் (internet) | Added by: tamil (18/12/11)
Views: 1373 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]