தென் ஆப்ரிக்க அதிபர், சமீபத்தில் 20வது குழந்தைக்கு தந்தையாகி
உள்ளார். தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா. இவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள்
மூலம் 19 குழந்தைகள் உள்ளனர். உலகக் கோப்பை புட்பால் அமைப்புக் கமிட்டி
தலைவர் ஜோசப் பிளாட்டர். இவர் ஜேக்கப் ஜுமா வின் நண்பர். ஜோசப் பிளாட்டர்
மகள் சோனா னோ. இவருடன் அதிபர் ஜேக்கப் தொடர்பு வைத்திருந்ததாக
கூறப்படுகிறது.
சோனோனோவுக்கு வயது 39. அதிபரைவிட 6 வயது சிறியவர். இவர் மூலம்
குழந்தை பெற அதிபர் விரும்பியதாகவும், அதற்கு சோனானோவும் யுநோரு
சொல்லவில்லை என்றும் தெரிகிறது. அதனால், கடந்த அக்டோபரில் அவருக்கு பெண்
குழந்தை பிறந்தது. 3 மனைவிகள் மற்றும் சோனானோவுடன் கள்ளத் தொடர்பு மூலம்
20 குழந்தைகள் மட்டுமின்றி, அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு பல பெண்களுடன்
தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் பல குழந்தைகள் உண்டு என்றும் சண்டே
டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தென்ஆப்ரிக்க ஜுலு இன
வழக்கப்படி, கள்ளத் தொடர்பு மூலம் பிறக்கும் குழந்தை மற்றும் தாய்க்கு
ஜீவனாம்சம் அளிக்கப்படுவதுண்டு. அதை நிர்ணயிக்க அதிபர் நியமித்த குழுவினர்
சமீபத்தில் சோனானோ மற்றும் அவரது குடும்பத்துடன் பேரம் பேசியதாக தகவல்
வெளியானது. தாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் பல பெண்களை
மணப்பதை அதிபர் ஜேக்கப் நியாயப்படுத்தி பேசினார். யுயுகலாசாரம் நாட்டுக்கு
நாடு வேறுபடுகிறது. ஒரு இடத்தில் தவறாக கருதப்படுவது இன்னொரு இடத்தில்
ஏற்கப்படுகிறது. மற்ற நாடுகளின் கலாசாரத்தை நான் மதிக்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் வழக்கம்தான் உயர்ந்தது என்று நினைப்பதுதான் பிரச்னைருரு என்றார். |