வியாழன், 28/11/24, 11:10 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் [ Add new entry ]

2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?
2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?

Moon 2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர். ‘இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை.
Category: செய்திகள் | Added by: tamilan (24/12/09)
Views: 1693 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]