டென்மார்க்கில்
உள்ள தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு தொழில் நிலையங்களிலும்rnபணியாற்றுவோர்
தமது வேலை நேரத்திலேயே சலரோகம், மாரடைப்பு போன்ற நோய்கள்rnஇருக்கிறதா
என்பதை
பரிசோதிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். சாதாரணமாகrnஇத்தகைய பரிசோதனைகளை
செய்ய பெரும்பாலானவர் விரும்பமாட்டார்கள் என்றrnகாரணத்தால் வேலை நேரத்தில்
இந்த பரிசோதனையை செய்ய முடியும் என்று 3 எப்rnதொழிற்சங்க அதிகாரிகள்
தெரிவிக்கிறார்கள். இதற்கமைவாக ஏ.எப் பில் உள்ளrnஊழியர்கள் 658 பேர்
பரிசோதிக்கப்பட்டு இவர்களில் 107 பேருக்கு நீரிழிவு,rnஉயர் இரத்த அழுத்தம்
என்பன காணப்பட்டதால் மேலதிக சிகிச்சைக்குrnஅனுப்பப்பட்டுள்ளனர். மக்களின்
உடல் அரோக்கியத்தில் உள்ள தவறுகளைrnஆரம்பத்திலேயே கண்டு பிடிக்காவிட்டால்
பின்னர் அதிக விலை கொடுக்க வேண்டிrnவரும் என்பதால் இந்த ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. கொப்பன்கேகன் நகரசபையில்rn30 - 49 வயதுக்கிடைப்பட்ட
ஊழியருக்கு இந்தப் பரிசோதனை மேற்rnகொள்ளப்படுகிறது. இவ்விதம் மக்களை
பரிசோதிப்பது வருமுன் காக்கும் சிறந்தrnசெயல் என்று டென்மார்க் நீரிழிவு
நோயாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. |