Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் | [ Add new entry ] |
இந்த பூமிப் பந்தின் விந்தைகளை அறிந்து கொள்வதற்கு பாக்கியம் கிடைப்பதே அரிதானது. அதிலும் அண்டவெளி, விண்வெளி ஆய்வு கூடங்கள், பூமிக்கு வெளியே பூமியைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும் போன்ற உங்களின் கற்பனைகளுக்கு இத்தாலிய விண்வெளி வீரர் ஒருவர் பதிலளித்துள்ளார். குறித்த இத்தாலிய விண்வெளி வீரர் அண்ட வெளி ஆய்வுகள் தொடர்பான துல்லியமான முப்பரிமாண புகைப்படங்களை பிரசூரம் செய்துள்ளார். பூமிக்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட முதலாவது முப்பரிமாண புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தாலிய விண்வெளி வீரர் போலோ நெஸ்போலியினால் இந்த அற்புதமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. MagISStra விண்வெளி ஆய்வுப் பயணத்தின் போது அவர் இந்த அரிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். 54 வயதான நெஸ்போலி விண்வெளியிலிருந்து டுவட்டரில் தமது கருத்துக்களையும் பதிவு செய்திருந்ததுடன், பூமியின் விந்தையான முப்பரிமாண தோற்றங்களையும் வெளியிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் முதல் நெஸ்போலி MagISStra மையத்தில் விண்வெளி பொறியியலாளர் கடமையாற்றி வருகின்றார். Erasmus Recording Binocular 2 (ERB-2) என்ற அதி நவீன கமராவின் மூலம் நெஸ்போலி தமது அன்றாட நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் பூமியின் வெளித் தோற்றத்தையும், பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் எடுத்தியம்பும் வகையில் அமையப் பெற்றுள்ளது. சக விண்வெளி வீரர்கள் ஸ்கொட் கெலி, கெடி கொல்மன் உள்ளிட்டவர்களின் அன்றாட செயற்பாடுகளும் கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது டுவிட்டர் பக்கத்தில் 46,000 உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளதாக நெஸ்போலி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் வெளியிடும் படங்கள் தொடர்பில் நாள் தோறும் 200 – 300 வாசகர் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்டவெளி மற்றும் விண்வெளி ஆய்வு கூடத்தின் உணர்வுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் தாம் இந்தப் புகைப்படங்களை பிரசூரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நெஸ்போலியா கனிய வளங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வருகின்றார். ஆய்வு பணிகளுக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தாம் இந்த படங்களை பிடித்து பிரசூரம் செய்து வருவதாககக் குறிப்பிட்டுள்ளார். புகைப்படக் கலைஞர்களின் முக்கியமான ஓர் கருப் பொருளாக பூமி அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நெஸ்போலியா அடுத்த வாரமளவில் தமது சகாக்களுடன் பூமி திரும்பவுள்ளார். | |
Views: 1033 | |
Total comments: 0 | |