Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் | [ Add new entry ] |
அமெரிக்காவின் ஏழு பாடசாலை மாணவர்கள் வித்தியாசமான முறையில் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். உணவு உட்கொள்வதன் மூலம் உலக சாதனை படைப்பதற்கு இவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த ஏழு மாணவர்களும் தலா 7000 கலோரி சக்தியுடைய உணவுப் பொருட்களை உட்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் பூட்ஹில் மார்ச்சில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், தொடர்ச்சியாக உணவு உட்கொண்ட இளைஞர்களை உணவுச் சாலையின் முகாமையாளர் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏழு இளைஞர்களும் இணைந்து சுமார் 301 பேன்கேக் உணவுப் பண்டத்தை உட்கொண்டுள்ளனர் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை பார்த்த போது இந்த சாதனையை படைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதாக இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கின்னஸ் சாதனை நிர்வாகிகளுக்கு இந்த வீடியோ காட்சி அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. | |
Views: 918 | |
Total comments: 0 | |