சனி, 20/04/24, 2:42 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » செய்திகள் [ Add new entry ]

உலகின் மிகச் சிறிய சலவை இயந்திரம்.

உலகின் மிகச் சிறிய சலவை இயந்திரம் சீனாவில் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சான்டொங் மாகாணத்தின் குயிங்டாவோ நகரில் கடந்த மே மாதம் 18ம் திகதி இந்த மிகச் சிறிய சலவை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சலவை இயந்திரத்தின் அளவு 256 x 278 x 382 மில்லி மீற்றர்களாகும். உலகின் மிகச் சிறிய சலகை இயந்திரம் என்ற கிண்ணஸ் உலக சாதனை பெருமையையும் இந்த இயந்திரம் பெற்றுக் கொண்டுள்ளது.

குயிங்டாவோ நகரின் ஹேயர் நிறுவனத்தினால் இந்த சலவை இயந்திரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

சாதாரண சலவை இயந்திரத்தின் சகல தொழிற்பாடுகளும் இந்த இயந்திரத்தில் காணப்படுகின்றன.

0.15 கிலோ கிராம் எடையுடைய துணி வகைகளை இந்த சலவை இயந்திரத்தில் துவைக்க முடியும் எனவும், சலவை இயந்திரத்தின் எடை 5.33 கிலோ கிராம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிண்ணஸ் உலக சாதனைக் கண்காணிப்பாளர்களான அன்ஜலா வூ மற்றும் செங் டொங் ஆகியோர் இந்த சாதனையை கண்காணித்தனர்

Category: செய்திகள் | Added by: tamil (06/06/11)
Views: 879 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]