Home » Articles » அறிவியற்களம் » தொழில் நுட்பம் | [ Add new entry ] |
எல்லா வகையான கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சார்ஜர்கள் உருவாக்கம்
இதுவரை காலமும் குறிப்பிட்ட வகைக் கையடக்கத் தொலைபேசிக்கு அதே வகையைச் சேர்ந்த சார்ஜர்களே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு கையடக்கத் n;தாலைபேசிக்கும் ஒரே சார்ஜரின் மூலம் மின் சக்தியை வழங்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹேன்ட் செட்டின் ஊடாக இந்த சார்ஜரைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சார்ஜர்கள் அதிகளவு மின்சாரத்தைப் பயன்படுத்தாது எனவும், மிக நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது. புதிய வகை சார்ஜர் உற்பத்தியின் மூலம் வருடாந்த பச்சைவீட்டு வாயு வெளியீட்டு அனர்த்தத்தின் ஒரு பகுதியை வரையறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டுன் முதல் அரையாண்டுப் பகுதியில் இந்த யுனிவர்செல் எனப்படும் புதிய வகை சார்ஜர்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்த முடியும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். | |
Views: 1844 | |
Total comments: 0 | |