வியாழன், 28/11/24, 10:15 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் [ Add new entry ]

இரத்த சோகை
இரத்த சோகை

இரத்த சோகை என்பது ரத்தத்தில் சிவப்பு அணு குறைவது , சிவப்பு அணுவில் ஹீமோ க்லோபின் குறைவது அல்லது இரண்டும் குறைவது ஆகும் .

சிவப்பணு அளவு :

ஆண் : 4.5--6 million/cubic mm

பெண் :4.0-5.5 million/cubic mm

ஹீமோக்ளோபின் :

ஆண் :13-18 gram/dl

பெண் : 11.5-16.5 gram/dl

அறிகுறிகள்

1. களைப்பு, எடைக்குறைவு பசியின்மை.

2. கண்கள், உதடுகள், நகங்கள், நாக்கு வெளுத்துப்போதல்

3. வாய்ப்புண்,

4. சோர்வு,

5. மேல் மூச்சு வாங்குதல்.

6. கால், முகம் வீக்கம்.

7. மயக்கம், தலைசுற்றல்.

8. மஞ்சள் காமாலை.

9. வயிற்றுவலி.

10. வியர்த்துக் கொட்டுதல்.

11. மயக்கமுடன் வாந்தி.

12. புண்கள் ஆறாமல் இருத்தல்.

13. அடிக்கடி உடல் நலம் குறைதல்.

14. விழுங்குதில் சிரமம்.

15. காரணமற்ற தலைவலி.

16. படபடப்பு

17. கை, கால் குடைச்சல்.

18. குழப்பமான மனநிலை.

இரத்த பரிசோதனைகள் :

1. இரத்ததில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை ( RBC Count )

2. இரத்த சிகப்பணுக்களின் Hb யின் அளவு.

3. இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு

காரணங்கள் :

1. இரத்த சிகப்பணுக்கள் உற்பத்தி திறனில் குறைபாடு காரணமாக

2. இரத்தின் உள்ள இரும்புச் சத்து குறைவினால் உண்டாவது.

3. உணவில் Vitamin B12 Folic Acid பற்றாக்குறைவால் மற்றும் சத்துக் குறைவினால் உண்டாகும் இரத்த சோகை.

4. இரத்த இழப்பினால் உண்டாகும் இரத்த சோகை ..

மருத்துவம் :

# அயன் , போலிக் அசிட் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை படி சாப்பிடவேண்டும்.

# உணவுகள் :

தானியம் - கம்பு , ராகி , எள்ளு , சோயா

கீரை - பசலை , புதின , புளிச்ச கீரை , கொத்தமல்லி

காய்-- முருங்கை , பீற்கை , சுண்டைகாய், பாகற்காய்

பழம் - பேரிச்சம் , சப்போட்ட, நாவல் , திராட்சை

மற்றும் நாட்டு வெல்லத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.

Source: http://www.doctorrajmohan.blogspot.com

Category: உடல் நலன் | Added by: razmohan (26/07/10) | Author: razmohan
Views: 2348 | Comments: 1 | Rating: 0.0/0
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]