Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் | [ Add new entry ] |
இது வைரஸ் கிருமிகளால்(DEN 1,2,3,4) ஏற்படும் ஒரு வியாதி. இந்த கிருமிகளை பகலில் கடிக்கும் கொசுகளான ஏடெஸ் மூலம் பரவும் . எடேஸ் கொசு: tiger mosquito என்ற பெயரும் இதற்க்கு உண்டு , ஏனெனில் இதன் உடலில் புலி போல கோடுகள் உண்டு . எடஸ் கொசுவானது நல்ல நீரில் மட்டுமே வளரும் ( அழுக்கு நீர் , சாக்கடை இதற்க்கு பிடிக்காது ) மழை விட்டவுடன் டயர் , பாட்டில் , டீ கப், தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் உள்ள நீரிலும் பிரிட்ஜ் இன் அடியில் உள்ள நீர் , flower vase இல் மாற்றபடாத நீர் ஆகியவற்றில் இது முட்டை இட்டு லார்வவாக வளரும் தன்மை கொண்டது . குழந்தைகளை பாதிக்கும் மிக முக்கியமான நோய் ஆகும் . ஏழை , பணக்காரன் வித்தியாசம் இதற்க்கு கிடையாது .( சென்ற வருடம் மண் மோகன் சிங்கின் இரு பேரக்குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர் - source from flowervase ) எனவே வரும் முன் காப்பதே சிறந்தது . டெங்கு வகைகள் : அறிகுறிகள் : உடலில் சிறு சிறு ரத்த புள்ளிகள் சுரம் கொசு கடித்த ஆறு முதல் பத்து நாட்களுக்குள் வரும் . சுரம் கடுமையாக இருக்கும் .அய்ந்து நாட்களுக்கு பின் ஜுரம் குறையும் ஆனால் இந்த நேரத்தில் தான் நாம் ஜாக்கிரதை ஆக இருக்க வேண்டும் . இந்த நிலையில் இருந்து குழந்தை நலம் ஆகலாம் ,அல்லது ரதகசிவுறு நிலை அல்லது ஷாக் நிலைக்கு போகலாம் . எனவே ஜுரம் குறைந்து விட்டதே என்று அலட்சியமாக இருக்ககூடாது . சிகிச்சை : ஒய்வு அவசியம் மருந்து மாத்திரைகளை சொந்தமாக உபயோகிக்க கூடாது . ஆஸ்பிரின் மாத்திரையை கண்டிப்பாக கொடுக்ககூடாது ஜுரம் குறைய நேரமானால் வெதுவெதுப்பான நீரை வைத்து ஒத்தடம் தரலாம் தடுப்பு முறை : பகலில் வீட்டில் நுழைந்து கடிக்கும் கொசு இது எனவே இரவில் மட்டும் இல்லாது பகலிலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும் உடலில் தடவும் கொசுவிரடிகளை ( ஓடோமொஸ் ) கை ,கால்களில் தடவுவது நல்லது இரவில் முடிந்த வரை கொசுவலையினுள் தூங்குவது நல்லது வீட்டின் அருகயும் , வீட்டுக்கு உள்ளேயும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் | |
Views: 1773 | |
Total comments: 0 | |