வியாழன், 25/04/24, 5:42 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » உடல் நலன் [ Add new entry ]

குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :

(asthma is a Greek word that is derived from the verb aazein, meaning to exhale with open mouth, to pant. The expression asthma )

ஆஸ்த்மா என்பது அலர்ஜியினால் வரும் ஒரு நாள்பட்ட சுவாச மண்டல கோளறு ஆகும் .
இது நாள்பட்ட கோளறு ஆகும் . எனவே பொறுமை அவசியம் .

காரணங்கள் :

பரம்பரை ஜீன்கள்
சுற்று சூழல்

நடப்பது என்ன ?

உணவிலும் , காற்றிலும் உள்ள அலர்ஜி உண்டாக்கும் பொருள்கள் உடலில் சென்ற வுடன் நமது நுரையீரலின் உள்ளே உள்ள சிறு சிறு காற்று குழாய்கள் சுருங்க ஆரம்பிக்கும் . ஆரம்பத்தில் இந்த நிலை தற்காலிகமானது , ஆனால் போக போக இதனால் காற்று குழாய்கள் சுருங்கி மூச்சு விட சிரமம் ஏற்படும் . இது ஒருவித சத்தத்தை உண்டாக்கும் -(வீசிங் )

அறிகுறிகள் :

தொடர்ச்சியான இருமல்

மூச்சை வெளிவிடும்போது வீசிங் - அதாவது விசில் ஓலி

நெஞ்சை அடைப்பது போன்ற இறுக்கம்

மூச்சு விட சிரமம்

சோர்வடைதல்

பேச முடியாமல் மூச்சு வாங்குதல்

ஆஸ்த்மாவை தூண்டுபவைகள் :

ஒவ்வாமை பொருள்கள் : பூனை , நாய் போன்ற பிராணிகளின் முடி , கரப்பான் பூச்சியின் எச்சம், டஸ்ட் மைட், பூக்களின் மகரந்தம் , புற்களின் பூக்கள்

டஸ்ட் மைட் - கண்ணுக்கு தெரியாமல் தலையணை போர்வை முதலியவற்றில் இருக்கும் . இதன் எச்சத்தினால் அடிக்கடி ஒவ்வாமை வரும் . ஒரு தலையணையில் ஒரு கோடி என்ற அளவில் கூட இவை இருக்கும் . டஸ்ட் மைட் அலர்ஜி அல்ல , ஆனால் அதன் மலம் - ஒரு நாளைக்கு குறைந்தது 20 முறை போகும் - அலர்ஜியை ஏற்படுத்தும் .

டஸ்ட் மைடின் கழிவு பொருள்


டஸ்ட் மைட்

வாகன புகை மற்றும் சிகரட் புகை

உடலுக்கு போடும் சென்ட் , பாடி ஸ்ப்ரே

குளிர்ந்த காற்று

உடற்பயிற்சி , அதிகபடியான வேலை

மன அழுத்தம்(படிப்பு ,வீட்டு பாடம்) , அதிகபடியான சிரிப்பு கூட
http://doctorrajmohan.blogspot.com/2010/09/blog-post_22.html

Source: http://www.doctorrajmohan.blogspot.com

Category: உடல் நலன் | Added by: (23/09/10) | Author: dr rajmohan
Views: 1013 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]