உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு மன நலமும் ஒருவகையில் காரணமாகிறது. மன நலனை கவனிப்பதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.
சுவர்
இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான்
நன்கு சம்பாதிக்கவோ, சம்பாதித்ததை அனுபவிக்கவோ முடியும்.
உடல்
ஆரோக்கியதுக்கும் மன நலனுக்கும் தொடர்பு உண்டு. மனம் பாதிக்கப்பட்டால்
உடல் நலனையும் அது பாதிக்கச் செய்யும். மன நல பாதிப்பை கீழ் கண்ட
அறிகுறிகளைக் கண்டு நாம் அறிந்து கொள்ள முடியும்.
டென்ஷனுடன்
பற்களைக் கடித்தல், மூச்சுத் திணறல், பசி எடுக்காமை, உயர் ரத்த அழுத்தம்,
நெஞ்சடைப்பு போன்ற உடல் ரீதியான பாதிப்புகள் சாதாரணமாக ஏற்பட்டால் பிரச்னை
இல்லை.
எவ்வித காரணமும் இன்றி இவை ஏற்படுமானால் மன நலன் பாதிக்கத் தொடங்கி இருப்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல்
அடிக்கடி கவலை, எதையும் சிந்தித்து முடிவெடுக்க முடியாமை, தேவையில்லாமல்
கோபம் வருதல், சோர்வாக இருத்தல், தற்கொலை எண்ணங்கள் மேலோங்குதல் போன்றவை,
மன நலன் பாதிக்கப்பட்டுள்ளதற்கான மன ரீதியான அறிகுறிகள் ஆகும்.
சின்ன ஒரு விஷயம் கூட பெரிய மனநோயாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இது தோன்றி வெளிப்படையாகத் தெரிய ஒரு ஆண்டு கூட ஆகலாம்.
எப்படி போக்கலாம்?
மன
நோய்க்கு மன அழுத்தமும் ஒரு காரணமாக அமைகிறது. மன அழுத்தம் அதிகம்
ஏற்பட்டால் தினசரி வேலைகள், அலுவலம் ஆகியவற்றை கொஞ்சம் ஒதுக்கி வைத்து
விடுமுறையில் பிடித்த இடங்களுக்குச் செல்லலாம்.
தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபாடு இருந்தால் அவற்றில் நாட்டம் செலுத்தி, மன அழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்கலாம்.
புத்தகம், பாடல், ஓவியம் போன்ற ஏதேனும் ஒன்றில் நாட்டம் இருக்குமானால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி புத்துணர்வு பெறலாம்.
தினசரி
வேலைகளை ஒரே மாதிரி வேலைகளை செய்து வராமல் அவ்வப்போது பல மாற்றங்களைச்
செய்யலாம். தனிமையே கதி என்று இருக்காமல் நண்பர்கள், உறவினர்கள்
வீடுகளுக்குச் சென்று மனம் விட்டு பேசி, மன இறுக்கத்தைக் குறைக்கலாம்.
எனினும் தொடக்கத்திலேயே நல்ல மனநல மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப் படி நடப்பது இந்நோயைத் தடுக்க சிறந்த வழியாக இருக்கும்.
|