திங்கள், 29/11/21, 9:58 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » பாலியல் [ Add new entry ]

திருமணம் முடித்த பெண்களின் தாய்மைக்கான அறிகுறிகள்

திருமணமான தம்பதியர் உடனடியாக எதிர்பார்ப்பது காரையோ, பங்களாவையோ அல்ல; ஓர் அழகான குழந்தையைத்தான். ஒரு பெண் தாய்மை அடைந்துவிட்டாளா என்பதை சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். அந்த அறிகுறிகளை இங்கே பார்ப்போம்...

 

1. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு `பீரியட்ஸ்' என்கிற மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் கர்ப்பத்திற்கான முதல் அறிகுறி. இதை வைத்து கர்ப்பம் என்று உறுதி செய்துவிட முடியாது. சில பெண்களுக்கு வேறு காரணங்களுக்காகவும் `பீரியட்ஸ்' தள்ளிப்போகலாம். அதுபோன்ற நேரங்களில் தகுந்த டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

2. முதன் முறையாக ஒரு பெண் கருத்தரிக்கும்போது மசக்கை அதிகமாக இருக்கும். முதல் மாதத்தில் `பீரியட்ஸ்' நின்று, இரண்டாவது மாதம் ஆரம்பித்ததுமே இந்த மசக்கைக்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனோ, முதல்வேளை சாப்பாடு சாப்பிட்ட பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு வாந்தி ஏற்படாமல் குமட்டல் மட்டும் பல மணி நேரங்களுக்கு நீடிக்கலாம். சில வாரங்கள் வரையில் இந்த மசக்கை அறிகுறி இருக்கும். சிலருக்கு, மிகவும் அரிதாக 3 மாதங்களுக்கு மேலும்கூட இந்த அறிகுறி தென்படலாம்.

3. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும். வளரும் கருப்பையால் ஏற்படும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பையின் உள் அடுக்கில் ஏற்படும் நெருக்கம் காரணமாக இப்படி தோன்றுகிறது. கருவுற்ற 2, 3ஆவது மாதங்களில் இந்த அறிகுறி ஏற்படும். அதன்பிறகு இந்த அறிகுறி தென்படாது.

4. உருவாகும் கர்ப்பம் பெண்ணின் மார்பகங்களிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மார்பகத்தின் அளவு அதிகரிக்கிறது. தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருப்பதுபோல் தோன்றும். வலியும் இருக்கும். இந்த அறிகுறி இரண்டாவது மாதத்தில் ஏற்பட ஆரம்பிக்கும். மார்பகக் காம்பினை அழுத்தினால் அடர் மஞ்சள் நிற சீம்பால் போன்ற திரவக் கசிவு சிறிது வெளிப்படும்.

5. கரு வளர வளர வயிறும் பெரிதாகிறது. 18ஆவது வாரத்தில் வயிற்றில் வளரும் கரு அசைவதை உணரலாம். 18 முதல் 20ஆவது வாரங்களில் கர்ப்பிணிகள் இந்த அறிகுறியை உணரலாம். இந்தக் காலக்கட்டத்தில் கருவின் நெளிவு மற்றும் அசைவு தெரியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால், அப்போதைய கரு அசைவு, வயிற்றில் வளரும் குழந்தை உயிருடன் இருக்கிறதா? இல்லையா? - என்பதை தெரிவிப்பதாக அமைகிறது

Category: பாலியல் | Added by: tamilan (16/02/10)
Views: 6690 | Comments: 1 | Rating: 2.0/7
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]