வியாழன், 28/11/24, 10:17 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » பாலியல் [ Add new entry ]

உணர்வுகள் - உணர்ச்சிகள்

திருமணம் ஆன ஒரு கணவர் எழுதியிருந்த கேள்வியைப் படித்தேன். தனது மனைவியுடன் நெருங்கும் போதே என் உணர்வுகள் கிளைமாக்ஸ¨க்கு வந்து விடுகிறது என்று வேதனைபட்டிருந்தார். உணர்ச்சிகளின் வேகத்தால் அப்படி நிகழ்வு ஏற்படுகிறது. திருமணத்துக்கு முன் அளவுக்கதிகமாக உணர்ச்சிகளை காட்டி மாஸ்டர் பேஷனில் ஈடுபடுபவர்களுக்கு இந்தமாதிரியான பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது.

அந்தப்பிரச்னைகளைப் போக்க மனக்கட்டுப்பாடு அவசியம். வெறுமனே மனக்கட்டுபாடு பற்றி பேசினால் உணர்ச்சிகளுக்கு வடிகால் ஏது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு உடற்பயிற்சிகள் கைகொடுக்கும். காலையில் வாக்கிங், ஜாக்கிங், உடல் தேக பயிற்சிகள் செய்ய வேண்டும். செக்ஸ் ரீதியான சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் உணவு பழக்க வழக்கத்தையும் மாற்ற வேண்டும். பொதுவாக உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அளவுக்கதிகமான சூடு, வெப்பம் இருந்தாலே உணர்வுகள் வேகமாக வெளியேறிவிடும். எனவே, உணர்ச்சிகள் சூடாக இருந்தாலும், உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் தாம்பத்ய வாழ்க்கையில் சுகம் காண முடியும்.

பெண்கள் பலரும் தங்களது பீரியட்ஸ் பற்றி கேட்டிருந்தனர். இதுவும் உடல் ரீதியான மாற்றம்தான். இதுவும் தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்படும் சங்கமத்தால், விளையும் பிரச்னை தான். நீங்கள் மகளிர்நல மருத்துவரை அணுகி, உங்களது சந்தேகங்களைத் தெளிவாகச் சொன்னால், டிரீட்மென்ட் மூலம் நீங்கள் குணமாகலாம்.

வாழ்க்கையில் தங்களது லட்சியத்தில் வெற்றிக் கொடியை ஏற்றியவர்கள், தாம்பத்ய வாழ்க்கையில் சரியான வாழ்க்கைத்துணை அமையாமல் தோல்வியை அடைந்திருக்கிறார்கள். அப்படியே அமைந்தாலும், தாம்பத்ய சுகம் இல்லாமல் தவிக்கிறார்கள். இது ஒரு வேதனை தான் என்றாலும், ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது என்பது கடினமாக இருந்தாலும், முடிந்தவரை மனரீதியான பிரச்னைகளை தீர்ப்பது எளிதல்லவா?

சில இளைஞர்கள் நீலப் படங்களையும், பண்பாட்டை மீறிய கற்பனை உறவுகளையும் பார்த்து சலனப்படுவதாக கூறியிருந்தார்கள். உணர்ச்சிகளும், உறவுகளும் நேரான பாதையில் தான் செல்ல வேண்டும்.

சாலையில் காரை ஓட்டிக் கொண்டு சீரான வேகத்தில், சாலை விதிகளை மனதில் கொண்டு எதிரே வரும் வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக, கார் ஸ்டீரிங்கை நமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, எந்தவித விபத்தும் இல்லாமல் செல்கிறோம். அதைவிடுத்து தாறுமாறாக காரை ஓட்டினால் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியது வரும்.

அதுபோலத்தான் நமது உடலை நன்கு பேணி காத்து, மனநிலையை சீரான கட்டுப்பாட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் தானாக வரும். இதை அனைவரும் பின்பற்றினாலே போதும்.

இனி வரும் நாட்களில் உங்களது வாழ்க்கையில் சுகமே...சுகமே...

Category: பாலியல் | Added by: tamilan (16/02/10)
Views: 4093 | Comments: 1 | Rating: 0.0/0
Total comments: 1
.
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]