Home » Articles » அறிவியற்களம் » பாலியல் | [ Add new entry ] |
திருப்தியான சுகம்!
இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள். ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம். பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும்போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான். அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போயிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி, மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது. சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோ ஓவராகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும். இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை....சந்தோஷம் மட்டும் தான்.... | |
Views: 16757 | Comments: 4 | |
Total comments: 4 | |
. . . . | |