Home » Articles » அறிவியற்களம் » பாலியல் | [ Add new entry ] |
கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள்....
எனக்கு திருமணமாகி எட்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை உண்டான பாடாகத் தெரியவில்லை. என் மனைவியை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துள்ளேன். இதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமா? எதனால் குழந்தை உண்டாகவில்லை? மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து எத்தனை நாட்களுக்குள் உறவு கொள்ள வேண்டும்? எந்த நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது?. உறவில் திருமணம் செய்து கொள்வதால் குழந்தை பிறக்காமல் போவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கலாம். எனவே, உறவில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் முழுமையான உடல் பரிசோதனையும் பின்பு உங்களுக்கு விந்துப் பரிசோதனையும், உங்கள் மனைவிக்கு தேவையான ஹார்மோன் பரிசோதனையும் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் குழந்தை ஏன் பிறக்கவில்லை என்று அறிய முடியும். அதை அறிந்தவுடன் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கவேண்டும். குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்வதால் நன்மையைவிட தீமையே அதிகம். எனவே, நாட்களைக் குறித்துக் கொண்டு உடலுறவில் ஈடுபட வேண்டாம். ஒருநாள் விட்டு ஒருநாள் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. | |
Views: 15498 | Comments: 10 | |
Total comments: 10 | |
. . . . . . . . . . | |