திங்கள், 29/11/21, 10:48 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » பாலியல் [ Add new entry ]

ஆண் மலட்டுத்தன்மைக்கு எவையெல்லாம் காரணமாக அமைகின்றது?
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.

பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே 'ஸ்ரீ' குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம். உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.

பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.
உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.

ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
Category: பாலியல் | Added by: tamilan (26/07/09)
Views: 12492 | Comments: 16 | Rating: 2.5/25
Total comments: 151 2 »
.
.
.
.
.
.
.
.
.
.
1-10 11-15
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]