வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உறவு கொள்ளும் தம்பதியருக்கு, ஒரு வருடகாலம் கடந்த பின்னரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் புள்ளிவிவர கணக்கின்படி ஒரு வருடத்திற்குப் பின்னர் கர்ப்பம் உண்டாக வாய்ப்பு குறையத் தொடங்குகிறது. பாதுகாப்பான முறையில் உறவு கொள்ளும் தம்பதியர்கள், பாதுகாப்பு முறையை கைவிட்ட ஆறு மாதங்கள் கழிந்த பின்னரும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால்... 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப்பம் அடையும் வாய்ப்பு குறைவு என்பதால், இந்த வயதில் திருமணம் செய்யும் பெண்கள் ஆரம்பத்திலேயே மருத்துவரை சந்திப்பது நல்லது. முறையான மாதவிலக்கு இல்லாத பெண்கள், மற்றும் கடுமையான வலியுடன் மாதவிலக்கைக் கொண்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே கர்ப்பம் தரிக்க இயலும். கர்ப்பம் உண்டாகி, நிலைத்து நிற்க முடியாமல் ஏற்கனவே கலைந்து போயிருந்தால் மருத்துவர் மேற்பார்வை அவசியம். செக்ஸ் சம்பந்தமான நோய்கள், குறைபாடுகள் இருப்பதாக ஆண், பெண் இருவரும் சந்தேகித்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். |