Home » Articles » அறிவியற்களம் » மருத்துவம் | [ Add new entry ] |
பன்றி காய்ச்சலை தடுக்க தேவை ரூ 1. 50 மட்டுமே!!
கடந்த
ஆண்டு பறவைக் காய்ச்சல் (சிக்குன் குன்யா) என்ற நோய் உலகளவில் பல்லாயிரக்
கணக்கான மக்களை வாட்டி வதைத்ததை போல், இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சல்
நோய் உலக மக்களை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நோய் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் மருத்துவப் பரிசோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்நோய் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்வதும், அதிலிருந்து நம்மை நாமே வருமுன் காப்பதும் முக்கியம். பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?: பன்றிக் காய்ச்சல் (Swine flu) என்று அழைக்கப்படும் இந்த நோய், சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும் புளூவைரஸின் ஓர் உட்பிரிவான H1N1 என்ற வைரஸால் ஏற்படுகிறது. இது பன்றிகளின் சுவாச உறுப்பை தாக்கி, கடுமையான காய்ச்சலை உருவாக்கி, படிப்படியாக உடல் உறுப்புகளை செயல் இழக்க வைத்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ், பன்றிகளை மட்டுமின்றி பறவைகள், குதிரை மற்றும் மனிதர்களையும் தாக்குகிறது. 1930-ல் முதன் முறையாக பன்றி இனங்களில் இந்நோய் கண்டறியப்பட்டது என்றாலும், இன்றும் முழுமையான எதிர்ப்பு மருந்துகள் கண்டறியப்பட வில்லை என்பது தான் உண்மை. பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் என்ன? : உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள். இந்தியாவில் அதிகம் பாதிக்க பட்ட பகுதி: மும்பை, புனே நகரங்கள் அதிகம் பாதிக்க பட்ட பகுதியாக சொல்ல படுகிறது. பன்றி காய்ச்சலை இலவசமாக தடுப்பது எப்படி? * கை குலுக்குவதையும், கட்டி தழுவதுவையும் தவிர்க்கவும். * நோய் பாதிப்பு உள்ளவர்களை நேரடியாக தொட்டு பேசக்கூடாது. அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. * கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் பன்றி காய்ச்சலை ரூ 1. 50 -ல் தடுப்பது எப்படி? பன்றி காய்ச்சலை தடுக்க தேவை ரூ 1. 50 மட்டுமே என்றால் ஆச்சர்யமா இருக்கா?
முன்னெச்சரிகை நடவடிக்கையாக முகமூடி அணிந்தால் பன்றி காய்ச்சல் பரவாமல்
தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த முகமூடி ரூ 1.50 -ல்
இருந்து ரூ 50.00 வரைக்கு விற்கிறது. ஒரு முறை மட்டும் உபயோக படும்
முகமூடிகள் ரூ 1.50 க்கும், கொஞ்சம் தரமான நிரந்தர உபயோக படும் முகமூடிகள்
ரூ 50.00 க்கும் கிடைக்கிறது. Source: http://mounamaana-neram.blogspot.com/2009/08/1-50.html | |
Views: 2438 | |
Total comments: 0 | |