Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் | [ Add new entry ] |
தூண்டில் போடுபவர்களை அஞ்சலி செலுத்தவைத்த மீன்! பென்சனின் இறப்பு இங்கிலாந்து உள்ள தூண்டில் மீன் பிடிப்பாளர்களை (Anglers) துயரத்தில் ஆழ்த்தி விட்டது. வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தாத குறையாக,அதிர்ச்சியில் அவர்கள் மூழ்கிப் போனார்கள் என்றால் பென்சனின் பிரபல்யத்தைப் பற்றி என்னவென்பது. பென்சன் ஒரு அரிய வகை மீன்.பென்சனின் பெயர் இங்கிலாந்து மக்களுக்கு மிகவும் பரீச்சயமான ஒரு பெயர்.டன்சார் பகுதியில்,எட்டு ஏக்ரா பரப்பளவில் பரந்து விரிந்து கடல் போல காட்சியளிக்கும் கிங்பிஷர் ஏரியில் வாழ்ந்து வந்த பென்சன் கடந்த இருதினங்களுக்கு முன் செத்து மிதந்தது.அதற்கு வயது 25.எடை 29 கிலோ. அதன் மதிப்பு 16 லட்சம். டோனி பிரிட்ஜ்ஃபூட் என்ற தனிநபருக்குச் சொந்தமான இந்த ஏரியில் மற்ற வகை மீன்களோடுதான் பென்சனும் வாழ்ந்து வந்தது.இதற்கு தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து வந்தனர். வேடிக்கைப்பார்க்க வந்த எந்தப் பாவியோ வேதிப்பொருள்கள் அதிகம் கலந்த உணவை ஏரியில் எறிந்திருக்கிறான்.அதை உண்ட பென்சன், ஜீரணக்கோளாறு ஏற்பட்டு மல்லாந்துவிட்டது. பென்சனைக் கொன்ற கொலையாளி தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறான். பென்சனைப் பற்றி டோனி பிரிட்ஜ்ஃபூட் கூறுகையில், “பென்சன் சாதாரண மீன் அல்ல. அதன் வாழ்விற்கு பின்னால் ஒரு சரித்திரம் இருக்கிறது.அதைப் போன்ற மீன் வகைகள் இங்கிலாந்து முழுக்க காணப்பட்டாலும், மக்களின் மனதில் இடம்பெற்றது பென்சன் மட்டுமே. ஏரிக்கு வரும் அனைவரும் பென்சனைக் காணாமல் திரும்ப மாட்டார்கள்.பென்சன் இறந்துவிட்டபடியால்,அதற்கு பதில் வேறு மீன் ஒன்றை ஏரியில் இடம் பெறச்செய்வது குறித்து இனிமேல்தான் யோசிக்கவேண்டும்”என்கிறார். இந்த ஏரிக்கு 95ஆம் வருடம் வந்த பென்சன் கடந்த 15 வருடங்களாக புகழ்ப்பெற்ற ஓர் உயிரினமாக இங்கிலாந்தில் கருதப்பட்டு வந்திருக்கிறது.பலமுறை தூண்டிலில் மாட்டியிருக்கிறது பென்சன்.ஆனாலும் அதை உடனே ஏரியிலேயே விட்டுவிடுவார்கள் மீன் பிடிப்பாளர்கள்.இப்போது நிரந்தரமாக இவ்வுலகை விட்டு அகன்றுவிட்டது பென்சன். Source: http://www.tamilvanan.com/content/2009/08/05/anglers-mourn-to-a-fish/ | |
Views: 2133 | |
Total comments: 0 | |