Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் | [ Add new entry ] |
போக்கிலி கருந்துளைகள்
முனைவர். க. மணி நமது கேலக்ஸியின் (ஆகாய கங்கை அல்லது பால்வழி மண்டலம்) மையத்தில் ஏராளமான கருந்துளைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஆயிரம் முதல் நூறாயிரம் சூரியன் எடை கொண்டவை. அத்தனை பாரியாக இருந்தாலும் உருவத்தில் அவை இந்த வாக்கியத்தின் முடிவில் இடப்படும் முற்றுப்புள்ளி அளவே உள்ளன. அவை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட முடியாது, ஏனெனில் அவை அசுர வேகத்தில் கேலக்ஸியில் ஓடித்திரிந்தபடி வழியில் அகப்படும் நட்சத்திரங்களை ஸ்வாகா செய்து கொண்டிருக்கின்றன என்று ஹார்வர்டு ஸ்மித்சோனியன் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல வேளையாக நமது சூரிய மண்டலம் கேலக்ஸியின் விளிம்பில் இருப்பதால் ஆபத்திலிருந்து தப்பித்தோம். நமக்கு அருகாமையில் இருக்கும் கருந்துளை குறைந்தது ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் உள்ளது. அவை ஒளி வேகத்தில் தாக்க வந்தால்கூட ஆயிரம் ஆண்டுகள் வரை நிம்மதியாக இருக்கலாம். ஆனால் பொருள்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்ய இயலாது என்று ஐன்ஸ்ட்டின் சொல்லியிருக்கிறார். அவர் சொல் பலிக்கும். கருந்துளைகள் கேலக்ஸிகளில் ஆரம்பத்தில் தோன்றிய சூரியன்கள்தான். வயது முதிர்வின் காரணமாக அவை கருந்துளையாக மாறிவிட்டன. அது சரி அந்தக் கிழட்டுச் சூரியன்கள் ஏன் இப்படி தலை தெறிக்க ஓட வேண்டும்? ஆகாய கங்கை போன்ற பெரிய கேலக்ஸிகள் பல சிறிய பிஞ்சு கேலக்ஸிகள் ஒன்றாய்த் திரண்டு உருவானவை என்பது ஒரு விளக்கம். பிஞ்சு கேலக்ஸிகள் கருந்துளைகள் ஒன்றிரண்டை வயிற்றில் சுமந்தபடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதால் பெரிய கேலக்ஸிகள் தோன்றுவதாக இருப்பின் அந்த மோதலின் விளைவாகவே கருந்துளைகள் எலாஸ்ட்டிக் கொல்லிஷன் என்ற விளைவால் ரப்பர் பந்துகள் போல மோதி விலகி இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன என்பது நல்ல விளக்கமாக இருக்கிறது. முனைவர். க. மணி (kmani52@gmail.com) பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர் | |
Views: 1488 | |
Total comments: 0 | |