செவ்வாய், 23/04/24, 12:59 PM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் [ Add new entry ]

உலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில
கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமானபறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப்பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன

[size=13]பெரிய ஓக்[/size]

பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில் கனடாவுக்குஅப்பாலுள்ள தீவுகளிலும் கிறீன்லாந்து ஐஸ்லாந்து நோர்வே அயர்லாந்து மற்றும்பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசிச் சோடிகள்இ 1844இ ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்குஅப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன.இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. எனைய ஓக்குகளைப் போல பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன.பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன.

[color=red] டோ[/color]டோ

டோடோ அழிந்த பறவையினங்களில் ஒன்று. இதுமொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக்கொண்டது.கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்குபோர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர்டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது.

யானைப் பறவை

யானைப் பறவை அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும்.மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐநூறு கிலோகிராம்) விட நிறையுடையாதகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாகஇருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன

Source: http://sivatharisan.karaitivu.org/

Category: விநோதங்கள் | Added by: (01/07/10) | Author: sivatharisan
Views: 1589 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]