Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் | [ Add new entry ] |
இலட்சாதிபதியின் இணையப்பக்கம்
இணைய தள உலகில் பல சுவார்ஷ்யமான செய்திகள் பல உண்டு. அதில் ஒன்று தான் www.milliondollarhomepage.com. இந்த இணையதளம் பிரித்தானிய வர்த்தக முகாமைதுவம் கற்க தொடகிய 21 வயது Alex Tew என்பவரால் 2005 நடுப் பகுதியில் உலக இணையதளத்தில் உலாவவிடப்பட்டது. இந்த மாணவன் தனது படிப்பித்கு பணம் ஈட்டுவதற்காக ஒரு வியாபாரனோக்கிலான புதிய யுக்தியை கையாண்டு அதில் சாதனையுடன் வெற்றியும் கண்டார். அதாவது, எப்படி 1மில்லியன் டொலர்களை இலகுவாக இணையதள மூலமாக உருவாக்குவது என்பது தான் அவரது திட்டம். அந்த திட்டப்படி இணைய பக்கம் ஒன்றை 10,000 சிறு சதுரபகுதிகளாக பிரித்து ஒவ்வொரு சதுரங்களையும் 100 மிகச்சிறிய கூறு (pixel) களாக்கி ஒவ்வொரு கூறுகளையும் 1$ விலைக்கு விற்பதாகும். 2005 October மாதம் அனைத்து செய்திகளிலும் இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டதுடன் பிரபல்யத்திற்கு ஊடகங்கள் மிகவும் துணையும் போயின (Press Coverage). இதன் பிரபல்யம் காரணமக பல லட்சம் மக்கள் அந்த தளத்தில் தினமும் பார்வையிடுவதனால்அங்கு தமது பகுதிகளை வாங்கிய வர்தக ஸ்தாபனங்கள் இலாபமடைந்து கொண்டு வருகின்றன (கொடுத்த பணத்தின் மேலான பலன் கண்டன நிறுவனங்கள் ). இதனிடயே இந்த விடயத்தை கண்ணுற்ற சட்டவிரோத இனைய உடைப்பு (hackers) கும்பல் தனது கைவண்ணத்தை சிலநாட்களில் காட்டி தளத்தை முடக்கியது மல்லாமல் $50,000 கப்பம் தந்தால் இயங்க அனுமதிப்பதாகவும் மின் அஞ்சல் மூலம் மிரட்டியும் இருந்தனர் என்பது பின்னர் பரபரப்பான குறிப்பிடதக்க ஒரு செய்தியாகும். visit: www.milliondollarhomepage.com Source: http://www.milliondollarhomepage.com | |
Views: 1148 | |
Total comments: 0 | |